• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • துல்கர் சல்மானின் குருப் படத்தை குவைத்தில் வெளியிட தடை!

துல்கர் சல்மானின் குருப் படத்தை குவைத்தில் வெளியிட தடை!

குருப்

குருப்

சுற்றுலாவை விளம்பரப்படுத்தும்விதமாக தங்கள் நாட்டில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு அரபு நாடுகள் முழு ஒத்துழைப்பு தந்து வந்தன. பல சலுகைகளும் ஆரம்பத்தில் இருந்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
துல்கர் சல்மான் நடிப்பில் குருப் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை குவைத்தில் வெளியிட அந்நாட்டு தணிக்கைக்குழு அனுமதி மறுத்துள்ளது.

சுற்றுலாவை விளம்பரப்படுத்தும்விதமாக தங்கள் நாட்டில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு அரபு நாடுகள் முழு ஒத்துழைப்பு தந்து வந்தன. பல சலுகைகளும் ஆரம்பத்தில் இருந்தன. தொடர்ச்சியாக அரபு நாடுகளை வில்லன்களும், தீவிவாதிகளும் பதுங்கியிருக்கும் இடமாக படங்களில் சித்தரிக்க, அரபு நாடுகள் அங்கு படப்பிடிப்பு நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்தன.

படத்தின் ஸ்கிரிப்டை நீங்கள் சமர்ப்பித்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதி தரப்படும். சமீபத்தில் வெளியான இந்திப் படம் பெல்பாட்டம் சில அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.

Also read... 1.6 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் பீட்டர் ஜாக்சனின் Weta நிறுவனம்!

குருப் படம் சுகுமாரன் குருப் என்ற கொலையாளியின் கதை. நடந்த உண்மைச் சம்பவம். இன்சூரன்ஸ் பணத்துக்காக வேறொருவனை கொலை செய்து, அது தான் என்று நாடகமாடி, வெளிநாட்டிற்கு தப்பி சென்றவன் சுகுமாரன் குருப். அவன் குவைத்துக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இன்றுவரை குருப்பின் கதை மர்மமாகவே உள்ளது. படத்தில் இந்த விஷயங்கள் இடம்பெறுவதால் குவைத் அரசு படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளது

அதேநேரம் பிற நாடுகளில் அதிக திரைகளில் குருப் இன்று வெளியாகியுள்ளது. யுஎஸ்ஸில் 83 இடங்களில் குருப் வெளியாகியுள்ளது. இதற்கு முன் மாமாங்கம் திரைப்படம் 70 இடங்களில் வெளியானதே மலையாளப் படங்களில் அதிகபட்சமாக இருந்தது அதனை குருப் முறியடித்துள்ளது. யுஎஸ்ஸில் அதிக இடங்களில் வெளியான முதல் 7 மலையாளப் படங்கள்.

ஒடியன் - 45 இடங்கள்

இட்டிமணி மேட் இன் சைனா - 48 இடங்கள்

மதுர ராஜா - 51 இடங்கள்

அதிரன் - 54 இடங்கள்

லூசிபர் - 58 இடங்கள்

மாமாங்கம் - 70 இடங்கள்

குருப் - 83 இடங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: