Home /News /entertainment /

பீஸ்ட் திரைப்படத்தை திரையிட குவைத் அரசு தடை!

பீஸ்ட் திரைப்படத்தை திரையிட குவைத் அரசு தடை!

பீஸ்ட்

பீஸ்ட்

இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் இங்கு வெளியாகவில்லை. வன்முறை காட்சிகள் காரணமாக மாஸ்டரை குவைத்தில் திரையிட அனுமதிக்க வில்லை.

பீஸ்ட் திரைப்படத்தை குவைத்தில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. படத்தில் இடம்பெறும் தீவிரவாத காட்சிகள் மற்றும் வன்முறைகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் வெளியாகும்போது, அந்தந்த நாட்டு தணிக்கைக்கு உட்பட்டே வெளியாகும். குறிப்பாக அரபு நாடுகளை பொறுத்தவரை தணிக்கைகள் மிக கடுமையாக பின்பற்றப்படும். தீவிரவாத காட்சிகள், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களை அரபு நாடுகள் அனுமதிப்பதில்லை. அதேபோல் அரபு நாடுகளில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட படங்களையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் குவைத் அரசு விதிமுறைகளை கறாராக பின்பற்றி வருகிறது.

Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான குரூப் படத்தையும் குவைத் அரசாங்கம் வெளியிட அனுமதி மறுத்தது. தமிழில் சமீபத்தில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை குவைத்தில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறும் தீவிரவாதிகள் குறித்த காட்சிகளுக்காகவும், வன்முறை காட்சிகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் இங்கு வெளியாகவில்லை. வன்முறை காட்சிகள் காரணமாக மாஸ்டரை குவைத்தில் திரையிட அனுமதிக்க வில்லை.

4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றை தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்குள்ளவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். ஷாப்பிங் மாலில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர் RAW அதிகாரியான வீரராகவன் (விஜய்). அவர் தீவிரவாதிகளைக் கொன்று பிணைக்கைதிகளை மீட்பதுதான் படத்தின் கதை. ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் திரைக்கு வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Beast, Thalapathy vijay

அடுத்த செய்தி