குட்டி ஸ்டோரி பாடலின் தோனி வெர்ஷனை வெளியிட்ட பிரபல வர்ணனையாளர்

தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் தோனி வெர்ஷனை உருவாக்கி வெளியிட்டுள்ளார் வர்ணனையாளர் பாவனா.

குட்டி ஸ்டோரி பாடலின் தோனி வெர்ஷனை வெளியிட்ட பிரபல வர்ணனையாளர்
குட்டி ஸ்டோரி தோனி வெர்ஷன்
  • Share this:
கிரிக்கெட் அரங்கின் "கூல்" என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று (ஜூலை 7). ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

தோனிக்கு வாழ்த்து சொல்லி உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளரான பாவனா, குட்டி ஸ்டோரி பாடலின் தோனி வெர்ஷனை வெளியிட்டு அசத்தியுள்ளார். பாடலின் வரிகள் தோனியின் சாதனைகளை பேசியுள்ளன. இந்தப் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான டுவைன் பிராவோ தோனிக்கு பிறந்தநாள் பரிசாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘Number 7’ என தோனியின் ஜெர்சி நம்பரை குறித்து பதிவிட்டுள்ள அந்த பாடலில், தோனி பிறந்த இடம் தொடங்கி, மூன்று வித கோப்பையையும் கைப்பற்றிய வரலாறு வரை அனைத்தையும் நினைவு கூர்ந்து பாடியிருந்தார். மேலும் தோனி தனக்கு சகோதரன் எனவும் பிராவோ உணர்ச்சி பொங்க கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading