Home /News /entertainment /

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோவாக ஜொலிக்கும் சிவக்குமார் குடும்பம்!

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோவாக ஜொலிக்கும் சிவக்குமார் குடும்பம்!

சிவக்குமார் குடும்பம்

சிவக்குமார் குடும்பம்

சூர்யாவின் காதல் மனைவி ஜோதிகா. சமூக அக்கறையுள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமைசாலி.

நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோகள் தான் என தங்கள் செய்கையின் மூலம் சொல்லி வருபவர்கள் நடிகர் சிவக்குமாரின் குடும்பம்.. அது பற்றிய தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.

70-களில் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட பேரழகன், நடிகர் திலகம், மக்கள் திலகம் என தமிழ் சினிமாவின் கோட்டையை இருவர் ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் கதாநாயக கனவுடன் சென்னைக்கு வந்து அழகன் முருகனாக பல திரைப்படங்களில் காட்சி தந்து பின் ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ திரைப்படம் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் சிவக்குமார்.

ஒரு நடிகராக இருந்தாலும் சமூக பிரச்சனைகளில் சிவக்குமாரின் குரலும் தவறாது ஒலித்தது. காவிரி முல்லை பெரியாறு பிரச்சனைகளில் விவசாயிகளின் குரலாக ஒலித்தது சிவக்குமரின் குரல். செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியதை சுட்டிகாட்டி ’முதலில் மக்களின் அடிப்படை தேவையான தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்’ என விமர்சித்தார் சிவக்குமார்.

சிவக்குமாரின் மகன் என்ற தகுதியுடன் சினிமாவில் அறிமுகமாகி தன் தனித்துவ நடிப்பால் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. ஒரு முன்னணி கமர்சியல் கதாநாயகனாக இருந்தாலும் நீட் விவகாரம்… புதிய கல்விக் கொள்கை… ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் என பல பிரச்னைகளுக்கு மக்களின் குரலாக ஒலித்தது சூர்யாவின் குரல். இருளர் இன மக்கள் மீதான காவல்துறையின் அத்துமீறலை அப்பட்டமாக சொன்னது இவரின் ’ஜெய் பீம்’ திரைப்படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடுபவராக, நீதிமன்றத்தின் உள்ளும் புறமும் ஒளிரும் சமூகப் போராளியாக நடித்திருந்த சூர்யா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ரீலிலும் மட்டுமல்ல, ரியலிலும் ஹீரோவாக பல சமூக பிரச்னைகளில் குரல் கொடுத்து வரும் சூர்யாவை சூப்பர் சூர்யா என்றே மக்கள் சொல்லத் தொடங்கினர்.

Sivakumar family is very socially concerned, suriya, suriya sivakumar, suriya movies, sivakumar family, actor sivakumar, சூர்யா, சூர்யா படங்கள், சூர்யா திரைப்படம், வாடி வாசல், வெற்றி மாறன், suriya jyothika, suriya jyotika, actor suriya, suriya karthi, jyothika, jyothika movies, karthi, actor karthi, karthi movies, சூர்யா ஜோதிகா, கார்த்தி, நடிகர் கார்த்தி, சூர்யா கார்த்தி

சிவக்குமாரின் மகனாக, சூர்யாவின் தம்பியாக பருத்தி வீரனில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தன் அப்பா அண்ணனின் வழியிலேயே விவசாயிகளின் நல்வாழ்வுக்கு கார்த்தியின் குரலும் கொடி பிடித்தது. மறைந்த நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்த கார்த்தியும் முதல் ஆளாக ஆஜரானார்.

Sivakumar family is very socially concerned, suriya, suriya sivakumar, suriya movies, sivakumar family, actor sivakumar, சூர்யா, சூர்யா படங்கள், சூர்யா திரைப்படம், வாடி வாசல், வெற்றி மாறன், suriya jyothika, suriya jyotika, actor suriya, suriya karthi, jyothika, jyothika movies, karthi, actor karthi, karthi movies, சூர்யா ஜோதிகா, கார்த்தி, நடிகர் கார்த்தி, சூர்யா கார்த்தி

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு சுட்டிகாட்டினார் கார்த்தி. அதுபோல் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்ற போது அதை வாழ்த்தும் விதமாக ”தங்கள் உயிரையே ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தன் டிவிட்டர் பதிவில் சொல்லி மகத்தான கலைஞன் ஆனார் நடிகர் கார்த்தி.

Sivakumar family is very socially concerned, suriya, suriya sivakumar, suriya movies, sivakumar family, actor sivakumar, சூர்யா, சூர்யா படங்கள், சூர்யா திரைப்படம், வாடி வாசல், வெற்றி மாறன், suriya jyothika, suriya jyotika, actor suriya, suriya karthi, jyothika, jyothika movies, karthi, actor karthi, karthi movies, சூர்யா ஜோதிகா, கார்த்தி, நடிகர் கார்த்தி, சூர்யா கார்த்தி

சூர்யாவின் காதல் மனைவி ஜோதிகா. சமூக அக்கறையுள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமைசாலி. தனியார் பள்ளியில் நடக்கும் கொள்ளைகளையும் தனி ஒரு ஆளாக துணிவுடன் எதிர்த்து கேள்வி கேட்கும் தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து போராடும் பெண்ணாக போராடும் ‘பொன் மகள் வந்தாள்’ போன்ற படங்களே இதற்கு சாட்சியானது. ஒரு விழாவில் பேசிய ஜோதிகா “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள், அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்’ என சொன்னது பெரும் சர்ச்சையானது. ’நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் எளிய மக்களுக்காக குரல் கொடுத்த ஜோதிகா ஒரு பொன் மகள்தான்’ என சொன்னது தமிழ் சமுதாயம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Karthi, Actor Suriya, Actress Jyothika, Tamil Cinema

அடுத்த செய்தி