Home /News /entertainment /

Nayanthara: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வியக்க வைக்கும் நயன்தாரா!

Nayanthara: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வியக்க வைக்கும் நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மாயா' திரைப்படம் அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது.

    'லேடி சூப்பர் ஸ்டார்' என தமிழ் சினிமா கொண்டாடும் கனவு தேவதை நயன்தாரா. இவரின் திரைப்பயணம் குறித்த ஒரு தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம். 

    கதாநாயகர்களின் பெயரால் மட்டுமே ஒரு திரைப்படம் மக்களிடம் போய்ச் சேர்ந்ததை மாற்றி கதாநாயகியின் பெயராலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதை நிரூபித்த மாயக்காரி நயன்தாரா. சரத்குமாரோடு 'ஐயா' திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்த திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடி ஆனார் நயன்தாரா.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கஜினி' இவருக்கு வேறொரு அடையாளத்தை தேடிக்கொடுத்தது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாநாயகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா என்றானது. 'கள்வனின் காதலி', 'வல்லவன்', 'தலைமகன்', 'ஈ', 'பில்லா', 'சத்யம்', 'ஏகன்', 'வில்லு' என வரிசையாக அக்காலகட்டத்தில் நயன்தாராவின் ராஜ்ஜியமே.

    அஜித்தின் பில்லாவில் ஒரு ஹாலிவுட் நாயகி போல் நயன்தாரா அவதாரமெடுத்ததை பார்த்து மிரண்டு கிறங்கி தவித்தது தமிழ் சினிமா. 'எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்' என பார்வையாளர்களை ஏங்க வைத்தது. தனுஷுடன் இவர் நடித்த 'யாரடி நீ மோகினி'. அடுத்து அஜீத், விஜய், சூர்யாவின், ஏகன், வில்லு, ஆதவன் திரைப்படங்கள் நயன்தாராவால் வண்ணமாகி 'வாராயோ வாராயோ மோனாலிசா' என வெல்வெட் கம்பளம் விரித்தது தமிழ் சினிமா.

    கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

    2010-ஆம் ஆண்டுக்கு பின் தமிழ் சினிமா நயன்தாராவை தவறவிட்டது. ஒரு பீனிக்ஸ் பறவையென மூன்று வருடம் கழித்து ராஜா ராணியாய் வெற்றி வாகை சூடி பின்பு, 'தனி ஒருவன்' மூலம் தமிழ் சினிமாவின் தனி ஒருத்தி ஆனார் நயன்தாரா. 'ராஜா ராணி' திரைப்படம் இவரை மாடர்ன் இளைஞர்களின் மன வானில் ராணியாக்கியது.

    இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்... மாதவனின் ராக்கெட்ரி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நயன்தாராவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'மாயா' திரைப்படம் அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. ரசிகர்களோ இவருக்கு கட் அவுட் வைக்க, தமிழ் சினிமாவோ இவரை லேடி சூப்பர் ஸ்டாராக்கியது. காதம்பரியாக 'நானும் ரவுடிதான்', சோலோ ஹீரோயினாக இவர் நடித்த 'டோரா', 'அறம்', 'ஐரா', 'கோலமாவு கோகிலா', 'மூக்குத்தி அம்மன்', 'நெற்றிக்கண்' போன்ற திரைப்படங்கள் இவரை மீண்டும் நம்பர் ஒன் நாயகியாக்கியது என்றால் அது மிகையல்ல.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara

    அடுத்த செய்தி