அம்மா என்று அதிமுகவினரால் அன்போடு அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பயோபிக் கதைகள் பல டிஜிட்டல் உலகை ஆக்கிரமித்தன. அவற்றைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் முயற்சித்து வந்த நிலையில் அந்த முயற்சியில் வெற்றியடைந்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய், இவர் இயக்கத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. ஜெயலலிதாவின் பள்ளிப் படிப்பு முதல் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது வரை அவர் கடந்து வந்த பாதைகளை கதையாக சொன்னது இந்த பயோபிக்.
இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி. மற்றும் கருணாநிதியாக நாசரும், ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனியும் நடித்து கச்சிதமாகப் பொருந்தினர். 60-களில் திரைப்படத்துறை எவ்வாறு செயல்பட்டது என்றும் எம்ஜிஆர்-சிவாஜி போட்டி, கருணாநிதி-எம்ஜிஆர் நட்பு போன்ற காட்சிகளும் படத்தில் இடம்பெற்று சுவாரசியத்தை கொடுத்தன.
மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!
வெள்ளித்திரையில் பெயர் பெற்ற கவுதம்மேனன் வெப் சீரியலிலும் காலடி எடுத்து வைத்தார். அவர் கையில் எடுத்துகொண்ட கதையும் ஜெயலலிதாவின் பையோபிக்கே. ’குயின்’ என்ற பெயரில் 11 அத்தியாயங்களாக வெளிவந்தது இந்த வலைத்தொடர். ஜெயலலிதாவை சித்தரிக்கும் கதாபாத்திரம் "ஷக்தி சேஷாத்திரி" என்ற பெயரிலும், எம்ஜிஆரை சித்தரிக்கும் கதாபாத்திரம் "ஜி.எம்.ஆர்" என்றும், சசிகலாவை சித்தரிக்கும் கதாபாத்திரம் "செல்வி" என்றும் இருப்பதை பார்த்த திரையுலகமும், அரசியல் உலகமும் டீசர் வெளிவந்த போதே தனது பரபரப்பு றெக்கையை பறக்க விட்டது.
சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரனும் நடித்திருந்தனர். எம்ஜிஆர் மீதான ஜெயலலிதாவின் பார்வை, அவரை அரசியல் ஆசானாக ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட சூழ்நிலை, அரசியலிலும் திரையுலகிலும் தமது ஆளுமையை நிரூபிக்க ஜெயலலிதா எதிர்கொண்ட சவால்களும் ஜெயலலிதா என்ற குயினின் இந்த பயோபிக்கில் சொல்லப்பட்டன. பயோபிக் படங்களுக்கான வரவேற்பு வரும் காலங்களில் அது படங்களின் எண்ணிக்கையை கூட்டும் என்பதில் ஐயமில்லைதான்..
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.