Home /News /entertainment /

புதுமைகளை கையாண்ட புதிய பாதை பார்த்திபன்!

புதுமைகளை கையாண்ட புதிய பாதை பார்த்திபன்!

பார்த்திபன்

பார்த்திபன்

தொடர்ந்து புதுமைகளை செய்யும் பார்த்திபன் அடுத்து சிங்கிள் ஷாட்டில் மொத்த திரைப்படத்தையும் இயக்கி முடித்து வெளியிட உள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.

தமிழ் சினிமாவில் ‘புதிய பாதை’ முதல் ‘இரவின் நிழல்’ வரை தன் படைப்புகளை வித்தியாசமாக கொடுத்தவர் பார்த்திபன். அவரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.

கதாநாயகன், தயாரிப்பாளர், கவிஞர், வசனகர்த்தா என பல்வேறு அவதாரங்கள் எடுத்து இன்றும் தனக்கென ஒரு பாதையை தமிழ் சினிமாவில் போட்டு கொண்டிருக்கும் பார்த்திபனின் இயக்கத்தில் வந்த முதல் திரைப்படம் ‘புதிய பாதை’. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதும் தமிழ் சினிமாவில் பார்த்திபனை கவனிக்கத்தக்க இயக்குநராக்கியது.

‘பொண்டாட்டி தேவை’ என்னும் வித்தியாச தலைப்பில் அடுத்த படைப்பை கொடுத்த பார்த்திபன். தொடர்ந்து சுகமான சுமைகள், தையல்காரன், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், தாலாட்டு பாட வா, உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளகுட்டிக்காரன் போன்ற தன் படைப்புகளால் பார்த்திபன் என்றால் புதுமைக்காரன் என சொல்ல வைத்தார்.

அதுவரை கமர்சியல் ரீதியாக இயக்கி நடித்து வந்த பார்த்திபன் அடுத்து தேசிய விருது வாங்கும் அளவில் தன் அடுத்த படைப்பான 'ஹவுஸ் ஃபுல்' படத்தை கொடுத்தார். ’அந்தப்புரம்’… பாரதி கண்ணம்மா’… ‘ நீ வருவாய் என’ ’ காக்கை சிறகினிலே’ என பார்த்திபன் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு இயக்குனர் சேரனின் இயக்கத்தில் வந்த ‘வெற்றி கொடி கட்டு’ திரைப்படம் வெற்றி கொடியை கட்ட பார்த்திப சாகசமும் ஓர் காரணமானது.

பார்த்திபனின் பக்குவப்பட்ட நடிப்பிற்கு அவரை தேடி நல்ல கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்தன.. அதில் ஒன்றுதான் ‘அழகி’.. மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான இத்திரைப்படத்தின் கதை ஒட்டுமொத்த தமிழ் திரை ரசிகர்களையும் கவர்ந்தது.

மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!

A Film without story என குறிப்பிட்டு வெளி வந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக...' ஆகிய படங்களை தன் அக்மார்க் முத்திரை உடன் சொல்லி வெளியிட்டு தமிழ் சினிமாவின் கலை கிறுக்கனாக உயர்ந்தார். அடுத்து அவர் இயக்கத்தில் அவர் மட்டுமே நடித்து வெளிவந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தில் ‘ஒரே கதாபாத்திரம்’, ‘ஒரே நடிகர்’ என தனது கைவந்த கலையை சாத்தியப்படுத்தி, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார் இந்த புதிய பாதை பார்த்திபன்.

சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

தொடர்ந்து புதுமைகளை செய்யும் பார்த்திபன் அடுத்து சிங்கிள் ஷாட்டில் மொத்த திரைப்படத்தையும் இயக்கி முடித்து வெளியிட உள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. பின்னணி இசைக்காக இத்திரைப்படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் ”இது சிங்கிள் ஷாட்டில் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உள்ளது” என கூறியது இரவின் நிழலிற்கு இப்போதே வெளிச்சம் பாய்ச்சி உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Parthiban

அடுத்த செய்தி