சாதிய பெருமிதங்களை சொன்ன சினிமாக்களுக்கு மத்தியில் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களும் முளைக்க தொடங்கி பாராட்டுக்களையும் பெற்றது. அப்படியான சினிமாக்களைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
சேரன் இயக்கத்தில் பார்திபன் மீனா நடித்திருந்த ’பாரதி கண்ணம்மா’ திரைப்படம் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த நாயகனின் பரிதாப காதல் கதையை சொல்லி, ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், ஆதிக்க சாதி இளம் பெண்ணிற்குமான காதலையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் கதைக்களமாக்கி விமர்சனங்களோடு வெற்றியும் பெற்றார் இயக்குனர் சேரன்.
தமிழ் திரைப்படங்களில் “வெயில்”, “பருத்தி வீரன்”, “காதல்”, “வெண்ணிலா கபடிக் குழு” போன்ற மாற்றுச் சிந்தனை திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தன. ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் அனைத்து அசைவுகளும் தோல்வியை நோக்கிப் பயணப்படுவதாக எடுக்கப்பட்ட “வெயில்” திரைப்படம், ஒரு மேல்சாதிப் பெண்ணைக் காதலிப்பதால் நிகழ்கிற தலித் இளைஞனின் மிகப்பெரிய தோல்வியை சொன்னது.
நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...
குடிசைக்குள் கதறி எறிந்த நான் யார்? தேர் ஏறாத சாமி இங்கு நான் யார்? உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்? ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்? மலக்குழிக்குள் மூச்சை அடைக்கும் நான் யார்? என வரிசையாக நான் யார் என கேள்வி எழுப்பி தமிழ் திரை ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ’ பரியேறும் பெருமாள்’. சாதியத்தையும் அதன் நிமித்தம் ஏற்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் உளவியல் ரீதியாக சிந்திக்க தூண்டும் வகையில் சொன்னது இந்த ’பரியேறும் பெருமாள்’.
விஜய் ரசிகரின் செயலைப் பாராட்டிய அஜித் ரசிகர் - இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமாவில் தலித் மக்களின் அரசியலை காத்திரத்துடன் பேசுவதற்கு ஒரு முன்பாதை அமைத்தவர் என்றால் இயக்குனர் ரஞ்சித்தை சொல்லலாம். ஆம் இவரே நேரடிக் காட்சி அரசியலை பேசுவதற்கான முதல் பாதையையும் அமைத்திருந்தார். ‘கபாலி’ திரைப்படத்தில் ’நான் கோட்சூட் போடுவேண்டா, கால் மேல கால் போடுவேண்டா’ என கொந்தளிப்புடன் வில்லனைப் பார்த்து ரஜினிகாந்த் பேசும் காட்சியில், காந்தி சட்டையை கழட்டியதற்கும், அம்பேத்கர் கோட் சூட் அணிந்ததற்குமான வரலாற்றையும் பதிவு செய்திருந்தார்.
தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாகும் அஜித் வில்லன்?
தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் சாதியக் கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமையையும் உரக்க சொல்லியது வெற்றிமாறனின் இயக்கத்தில் வந்த ‘அசுரன்’. "நம்ம கிட்ட காசிருந்தா புடுங்கிக்குவானுவ, நிலமிருந்தா எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது, படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க" என இறுதியில் சொல்லி தேசிய விருதையும் அள்ளி வந்தது அசுரன்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director vetrimaran, Mari selvaraj, Pa. ranjith, Tamil Cinema