முடக்கப்பட்டதா ட்விட்டர் கணக்கு - குஷ்பு விளக்கம்

முடக்கப்பட்டதா ட்விட்டர் கணக்கு - குஷ்பு விளக்கம்
குஷ்பு
  • Share this:
தனது ட்விட்டர் கணக்கை முடக்க முயற்சி நடப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையாகவும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ள குஷ்பு ட்விட்டரில் அதிகம் கருத்துகளை பதிவிடுவார்.

சமீபத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விமர்சித்து ட்வீட் பதிவிட்டு வரும் குஷ்புவின் ட்விட்டர் கணக்கிலிருந்து 2 நாட்களாக எந்த ட்வீட்டுமே செய்யப்படாமல் இருந்த நிலையில் தனது ட்விட்டர் கணக்கை முடக்க முயற்சி நடந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.


அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, “ஒரு நாளுக்கு முன்னதாக, மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து, மூன்று வெவ்வேறு நபர் என்னுடைய கணக்கைத் திறக்க அல்லது ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று ட்விட்டரிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக என்னுடைய ட்விட்டர் கணக்கை திறக்கவும் முடியவில்லை அதனுடைய பாஸ்வேர்டை மாற்றவும் முடியவில்லை. இதுதொடர்பாக ட்விட்டர் சார்பில் உதவி ஏதும் கிடைக்கவில்லை.

என்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டரிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடைபெறுகிறது என்று எந்த விவரமும் தெரியவில்லை. இந்தப் பிரச்னையை எப்படி தீர்க்க வேண்டும் என்பது குறித்து யாரேனும் தெரிவித்தால் அது பாராட்டத்தக்கதாக இருக்கும். வீட்டில் இருங்கள்.. பாதுக்காப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading