Home /News /entertainment /

நம்பவே முடியல! அதுக்குல்ல 31 வருஷம் ஆச்சு.. நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட குஷ்பு..

நம்பவே முடியல! அதுக்குல்ல 31 வருஷம் ஆச்சு.. நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட குஷ்பு..

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

Kushboo Sundar : சின்னத்தம்பி படம் ரிலீஸாகி 31 வருடம் நிறைவாகியுள்ளது என குஷ்பு மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    நடிகை குஷ்பு 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதையடுத்து வருஷம் 16, வெற்றிவிழா, கிழக்கு வாசல் ஆகிய படங்களில் நடித்தார். 1991 ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சின்னத்தம்பி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதையும் பெற்றார்.

    வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகல, என்ற வசனத்திற்கு ஏற்றவாறு குஷ்பு உள்ளார். சமீபத்தில் உடல் எடையை குறைத்த குஷ்பு, உடல் எடை குறைப்பு பற்றி பல டிப்ஸ்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். ஒரு பக்கம் அரசியல், ஒரு பக்கம் சினிமா என பிசியாக இருக்கும் குஷ்பு அடிக்கடி தனது பழைய நினைவுகள் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது சின்னத்தம்பி படத்தை பற்றி நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.



    also read : பிக்பாஸ் அல்டிமேட் வெற்றி மேடையில் எமோஷ்னல் ஆன சிம்பு- என்ன சொன்னார் தெரியுமா?

    அதில்  ‘ என்னால நம்பவே முடியல. சின்னத்தம்பி படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு தருணங்களும் மனதில் புதிதாக இருக்கிறது. நாங்கள் நல்ல படத்தை கொடுக்க நினைத்தோம், ஆனால் பி.வாசு சரித்திரம் படைத்துவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சின்னத்தம்பி படத்தை பற்றி தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Kushboo

    அடுத்த செய்தி