கூட்டத்தில் தவறாக நடந்து கொண்டவருக்கு ‘பளார்’ விட்ட குஷ்பு - வைரலாகும் வீடியோ

கூட்டத்தில் தவறாக நடந்து கொண்டவருக்கு ‘பளார்’ விட்ட குஷ்பு - வைரலாகும் வீடியோ
குஷ்பு
  • News18
  • Last Updated: April 11, 2019, 2:08 PM IST
  • Share this:
பிரசாரத்தின் போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகியுள்ளது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்களையும் களத்தில் இறக்கியுள்ளன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, வாக்கு சேகரித்தார். அதற்காக பிரசாரக்கூட்டத்தில் பேசிவிட்டு தனது காரைநோக்கிச் சென்ற குஷ்புவிடம் கூட்டநெரிசலில் பின்னால் வந்த இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.


அதில் ஆவேசமடைந்த குஷ்பு அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் பாதுக்காப்புக்காக வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.பிரசாரத்தின்போது கண்ணீர்விட்ட அன்புமணி - வீடியோ


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading