திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு குஷ்பூ கொடுத்த நச் பதில்

நடிகை குஷ்பூ

திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த ரசிகருக்கு நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

 • Share this:
  குஷ்பூவுக்கு கோவில், குஷ்பூ இட்லி என்று தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் குஷ்பூ. சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் இறங்கி கலக்கி வருகிறார். திமுக, காங்கிரஸ், பாஜக என மூன்று கட்சிகள் மாறிவிட்டாலும் ட்விட்டரில் அதிரடி காட்டுபவர் குஷ்பூ. தற்போது சினிமா, டிவி என மீண்டும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளார்.

  இதனிடையே தனது உடல் எடையை வெகுவாக குறைத்து குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஷ்பூவின் புகைப்படங்களை பார்த்த பலர் தற்போதைய ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறீங்க என்று புகழ்நது வருகின்றர்.

  இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பூ "ஓ, மன்னிக்கவும். நீங்கள் , 21 ஆண்டுகள் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் நான் எப்படியும் என் கணவரிடம் ஏதாவது கேட்கிறேன்“ என்று பதிவிட்டிருந்தார்.

  அப்போதும் குஷ்பூவை விடாமல் அந்த ரசிகர், உங்கள் கணவர் ஏதாவது பதில் அளித்தாரா என்று கேட்டுள்ளார். அதற்கு குஷ்பூ, துரதிர்ஷ்டவசமாக நான் அவருடைய மனைவிய. அதனால் மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டார். அவர் விட்டுக்கொடுக்க தயராக இல்லை“ என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: