கொரோனா பாதித்து குஷ்புவின் உறவினர் மரணம் - திரைத்துறையினர் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குஷ்புவின் உறவினர்  ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதித்து குஷ்புவின் உறவினர் மரணம் - திரைத்துறையினர் இரங்கல்
நடிகை குஷ்பு
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. இதில் 86, 984 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 5,164 பேர் மரணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அறுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பதாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதைப்பார்த்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30-வரையிலான ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால் இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்துமாதவி - வீடியோ

பார்க்க: நடிகை நிவேதா பெத்துராஜின் நியூ ஆல்பம்..!
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading