Home /News /entertainment /

Kuruthi Aattam Review : கலவை விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் குருதி ஆட்டம்…

Kuruthi Aattam Review : கலவை விமர்சனங்களைப் பெறும் அதர்வாவின் குருதி ஆட்டம்…

குருதி ஆட்டம் போஸ்டர்

குருதி ஆட்டம் போஸ்டர்

ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான குருதி ஆட்டம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    மஞ்சிமா மோகனை விரைவில் கரம் பிடிக்கும் கெளதம் கார்த்திக்!

    ஆக்சன் ஜானரில் குருதி ஆட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அந்தப் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள குருதி ஆட்டம் திரைப்படம் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்தனர்.







    ஆனால் தற்போது குருதி ஆட்டம் படத்திற்கு கலவை விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. அழுத்தம் இல்லாத காட்சிகள், பலவீனமான திரைக்கதை, சம்பவங்களுக்கான பின்னணி வலுவாக இல்லாதது உள்ளிட்டவை படத்தின் மீதான சுவாரஸ்யத்தை குறைத்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள்

    பிக் பாஸ் சீசன் 6ல் சர்ச்சை நடிகை? டி.ஆர்.பியில் கலக்க இப்படியொரு முடிவா?

    யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் வரவேற்பை பெற்றுள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Atharvaa, Kollywood

    அடுத்த செய்தி