Kuruthi Aattam: குருதி ஆட்டம் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் யுவன் ரசிகர்கள்!

குருதி ஆட்டம்

அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் நடிப்பில் 2018-ல் இப்படம் தொடங்கப்பட்டது.

  • Share this:
    யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை நேற்று குருதி ஆட்டம் படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ஜுலை 1-ம் தேதி வெளியாகிறது.

    குருதி ஆட்டம் படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இவர் மிஷ்கினின் உதவியாளர். இவரது முதல் படம் 8 தோட்டாக்கள். எம்.எஸ்.பாஸ்கர் நடித்த இந்த க்ரைம் த்ரில்லர் பரவலான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2017-ல் அறிவிக்கப்பட்ட படம்தான் இந்த குருதி ஆட்டம். அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் நடிப்பில் 2018-ல் இப்படம் தொடங்கப்பட்டது. 2020-க்குள் படம் வெளிவந்திருக்க வேண்டும். பல்வேறு பிரச்சனைகளால் அது நடக்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குருதி ஆட்டம் ஆக்ஷன் படம். க்ரைமும் உண்டு. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் இடம்பெற்றிருக்கும் ரங்க ராட்டினம் எனத் தொடங்கும் பாடலை ஜுலை 1-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். பைவ் ஸ்டார் நிறுவனம் பாடலை வெளியிடுகிறது. இவர்கள் தான் குருதி ஆட்டத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளனர். ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் குருதி ஆட்டத்தை தயாரித்துள்ளார்.

    திரைப்படம் யானை என்றால், பாடல்கள் மணியோசை. ஜுலையில் குருதி ஆட்டத்தின் மணியோசை கேட்கும் என்றிருக்கிறார்கள். ஆகவே, விரைவில் யானையையும் எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: