Home /News /entertainment /

10 நாட்களில் துல்கர் சல்மானின் குரூப் திரைப்படம் வசூலில் சாதனை

10 நாட்களில் துல்கர் சல்மானின் குரூப் திரைப்படம் வசூலில் சாதனை

குருப்

குருப்

மம்முட்டியின் படங்கள் எதுவும் இதுவரை 100 கோடி கிளப்பில் இடம்பெறவில்லை. அவரை முந்திக் கொண்டு அவரது மகனின் படம் இடம் பெறப் போகிறது.

  • News18
  • Last Updated :
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குருப் திரைப்படம் முதல் 10 தினங்களில் உலக அளவில் 75 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மலையாள சினிமாவின் வர்த்தகம் சிறியது. ஒரு முன்னணி மலையாள நடிகரின் படத்தின் மொத்த வசூல், தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களின் முதல்நாள் வசூல் அளவுக்கே இருக்கும். இருபத்தைந்து கோடிகள் ஒரு படம் வசூலித்தால் அது சூப்பர் ஹிட். அரிதாக ஒரு படம் 50 கோடிகளை தாண்டும். சமீபத்தில்தான் மோகன்லாலின் புலிமுருகன் 100 கோடிகளை கடந்தது. பிறகு அவரது லூசிபர் திரைப்படம்.

இந்தப் பின்னணியில் துல்கர் சல்மான் போன்ற ஒரு இளம் நடிகரின் படம் முதல் 10 தினங்களில் 75 கோடிகளை வசூலித்தால் மலையாள சினிமாவுக்கு அது எத்தனை பெரிய வெற்றி என்பதை ஒருவரால் யூகித்துக் கொள்ள முடியும்.



குருப் படம் பலவகைகளில் முக்கியமானது. கேரளாவுக்கு வெளியே அதிகம் கவனம் பெற்ற முதல் திரைப்படம் இது. தமிழகத்தில் பரவலாக ஓடியது. மலையாளப் படங்களுக்கு அரபு நாடுகளில் நல்ல மார்க்கெட் உண்டு. குருப் யுஎஸ், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. ஓடிடி தளங்கள் வழியாக மலையாளத்தின் சிறந்த படங்களை மலையாளிகள் அல்லாதவர்களும் சப் டைட்டில் துணையுடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் நல்விளைவு இது.

Also read... நயன்தாராவின் கனெக்ட் திரையரங்கில் வெளியாகும் - சூசகமாக அறிவித்த அனுபம் கேர்

குருப் படத்தை துல்கர் சல்மானே தயாரித்தார். பிரபல ஓடிடி தளங்கள் படத்தை பெரும் தொகைக்கு விலை பேசின. முப்பது கோடிகள்வரை தர முன்வந்தனர். ஆனால், மம்முட்டிதான், இது திரையரங்கில் வர வேண்டிய படம், பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கை வைத்து, படம் திரையரங்கில் வெளியாக காரணமாக இருந்தார். அவர் நம்பிக்கை வைத்தபடி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது படம்.

மம்முட்டியின் படங்கள் எதுவும் இதுவரை 100 கோடி கிளப்பில் இடம்பெறவில்லை. அவரை முந்திக் கொண்டு அவரது மகனின் படம் இடம் பெறப் போகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி