டிசம்பர் 2 மோகன்லாலின் மரைக்ககார் படம் வெளியாகிறது. அது இதுவரையான அனைத்து மலையாளப் படங்களின் வசூல் சாதனைகளையும் உடைக்கும் என்பது மலையாளிகளின் எதிர்பார்ப்பு.
துல்கர் சல்மானின் குருப் திரைப்படம் உள்ளூர், வெளியூர், வெளிநாடு என திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூலை அள்ளிக் குவிக்கிறது. வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த மலையாளப் படங்களில் பிரேமத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை குருப் பிடித்துள்ளது.
குருப் திரைப்படம் பிடிகிட்டா புள்ளியான சுகுமாரன் குருப்பை பற்றியது. இது கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம். இன்சூரன்ஸ் பணத்துக்காக வேறொருவரை கொலை செய்து அது தான் என்று நாடகமாடிய சுகுமாரன் குருப் குறித்து ஏற்கனவே மலையாளத்தில் படங்கள் எடுத்திருக்கிறார்கள். குருப் அதன் மாடர்ன் வெர்ஷன். சுகுமாரன் குருப் என்னவானான் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
குருப் திரைப்படத்தில் சுகுமாரன் குருப்பாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இந்திரஜித். படத்தை வெளியிட துபாய் தணிக்கைக்குழு அனுமதிக்கவில்லை. எனினும் பிற அரபு நாடுகளில் நேற்றுவரை 14 கோடிகளுக்கும் மேல் குருப் திரைப்படம் வசூலித்துள்ளது. யுஎஸ் மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் நல்ல வசூல். நேற்றைய நிலவரப்படி வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த மலையாளப் படங்களில் மூன்றாவது இடத்தில் இருந்த பிரேமத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை குருப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மோகன்லாலின் லூசிபர் உள்ளது. முதலிடத்தில் புலி முருகன். அதுவும் மோகன்லால் படம்.
டிசம்பர் 2 மோகன்லாலின் மரைக்ககார் படம் வெளியாகிறது. அது இதுவரையான அனைத்து மலையாளப் படங்களின் வசூல் சாதனைகளையும் உடைக்கும் என்பது மலையாளிகளின் எதிர்பார்ப்பு. என்ன நடக்கிறது பார்ப்போம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.