அஜித்தை விமர்சித்து பேஸ்புக் பதிவு! சர்ச்சையில் சிக்கிய குறளரசன்

எனக்கு அரசியலில் எந்தவித ஈடுபாடும் இல்லை என்று அஜித் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தை விமர்சித்து பேஸ்புக் பதிவு! சர்ச்சையில் சிக்கிய குறளரசன்
டி.ராஜேந்தர் உடன் குறளரசன்
  • News18
  • Last Updated: March 18, 2019, 4:11 PM IST
  • Share this:
அஜித்தை கேலி செய்யும் விதமாக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டது குறளரசன் இல்லை என்று சிம்பு தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அஜித்தை அரசியலுக்கு வரச்சொல்லி சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

அதில், “40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்தக் கருத்தை மையப்படுத்தி சிம்புவின் தம்பி குறளரசன் ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித்தை கேலி செய்து கருத்தை பதிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் குறளரசன் என்ற பெயருக்கு பதிலாக குரான் அரசன் டி.ராஜேந்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பக்கத்தில் உள்ள பதிவில் “எங்கப்பன் தான்யா அடுத்த முதல்வர் தீபா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும்” எனவும் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அஜித்தை சீண்டும் வண்ணம் கருத்து சொல்லி இருப்பதால் அஜித் ரசிகர்கள் சிம்பு தம்பி குறளரசன் மேல் கோபம் கொண்டு அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிம்பு தரப்பு, “குறளரசனின் கருத்து Kuran Arasan T.Rajendar என்கிற முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது போலி கணக்கு. Kural Tr என்பதுதான் குறளரசனின் முகநூல் கணக்கு” என்று விளக்கம் கூறியுள்ளனர்.

Also Watch...

First published: March 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading