• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுகீத் இயக்கத்தில் நரேன் நடித்திருக்கும் குரல்...!

சுகீத் இயக்கத்தில் நரேன் நடித்திருக்கும் குரல்...!

குரல்

குரல்

குரல் தவிர பிஜு மேனன், ஆஷா சரத் நடிக்கும் தலையுண்டு உடலில்லா படத்தையும், ஆசிப் அலி, அமலா பால் நடிப்பில் பறந்நு பறந்நு படத்தையும் சுகீத் எடுத்து வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நரேன் நடித்திருக்கும் புதிய படம் குரலின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை பிரபல மலையாளப்பட இயக்குனர் சுகீத் இயக்கியுள்ளார். 

சித்திரம் பேசுதடி மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாளியான நரேன். தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் கவனம் செலுத்தியதால் இரண்டு மொழிகளிலும் அவரால் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது. கத்துக்குட்டி போன்ற ஒருசில படங்களுக்கு பல வருடங்கள் எடுத்துக் கொண்டதும் அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது. கைதி படத்தில் நரேன் தன்னை புதுப்பித்துக் கொண்டார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலும் நடிக்கிறார்

நரேன் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் குரல். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு குரல் படத்தின் பர்ஸ்ட் லுக்கை கார்த்தி வெளியிட்டார். இதனை இயக்கியிருப்பவர் சுகீத். மலையாளப் பட இயக்குனர்

சுகீத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமில்லை என்றாலும் அவரது படம் முன்பே அறிமுகமானதுதான். கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல் நடித்த ஜன்னலோரம் திரைப்படம், சுகீத்தின் ஆர்டினரி படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல். ஜன்னலோரம் தமிழில் தோல்வியடைந்தது. ஆனால், ஆர்டினரி மலையாளத்தில் வெற்றி பெற்ற படம். பிஜு மேனன், குஞ்சாகோ போபன் பல படங்களில் இணைந்து நடிக்க அச்சாரமிட்ட படம் இது. சுகீத்தின் முதல் படமும்கூட.

Also read... சிக்கலில் சசிகுமாரின் ராஜவம்சம்...!

அதன் பிறகு சுகீத் எடுத்த 3 டாட்ஸ் படத்தில் நரேன் வில்லனாக நடித்திருந்தார். இப்போது அவரையே நாயகனாக்கி குரல் படத்தை எடுத்துள்ளார். இதுவொரு த்ரில்லர் படம். கதை, திரைக்கதையை ராகேஷ் சங்கர் எழுத, வசனத்தை சந்துரு எழுதியுள்ளார். ஷ்ரத்தா சிவதாஸ் நாயகி. பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் என்பவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

குரல் தவிர பிஜு மேனன், ஆஷா சரத் நடிக்கும் தலையுண்டு உடலில்லா படத்தையும், ஆசிப் அலி, அமலா பால் நடிப்பில் பறந்நு பறந்நு படத்தையும் சுகீத் எடுத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: