ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் குந்தவை வந்தியத்தேவன் காதல்!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் குந்தவை வந்தியத்தேவன் காதல்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இரண்டு முறை வந்தியத்தேவனைச் சந்தித்தும் அவனிடம் குந்தவையால் பேசமுடியவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் திரைப்படம் என்றதும் அதில் வெறும் போர்க்காட்சிகளும், சூழ்ச்சிகளும் மட்டுமே இருக்கும் என எண்ண வேண்டாம். அதில் அழகான காதல் இருக்கிறது. வந்தியத்தேவன் - குந்தவை இருவருக்குமான மெல்லிய காதல். ஆனால் அது ஆழமானது.

  வாணர் குல அரசனான வந்தியத்தேவன் சோழ அரண்மனைக்குள் நுழையும்போது வெறும் ஆதித்த கரிகாலனின் நண்பன் மட்டும் தான். அனைத்து செல்வங்களும் இழந்த கையறு நிலையில் நின்ற அரச குலம் அவனுடையது. குந்தவை சோழ பேரரசின் இளவரசி. மதிநுட்பத்திலும் ஈடு இணையற்றவளாக திகழ்பவள்.

  வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்படும். பின்னர் முதல் சந்திப்பில் அது காதலாக மாறும். அதே நேரம் வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ தனது குடும்பம் மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதாது. ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்காது.

  இரண்டு முறை வந்தியத்தேவனைச் சந்தித்தும் அவனிடம் குந்தவையால் பேசமுடியவில்லை. அதன் பிறகு வந்தியத்தேவனே குந்தவையைத் தேடி வந்து குந்தவையின் சகோதரன் ஆதித்த காிகாலன் கொடுத்தனுப்பிய ஓலையை தருகிறான். இருவருக்குள்ளும் காதல் மலா்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனா். பின்னர் சிறையிலிருக்கும் வந்தியத்தேவனிடம் தனது காதலை வெளிப்படுத்துவாள் குந்தவை.

  சோழ சாம்ராஜ்ஜியத்திற்காக எதையும் செய்யும் குந்தவை!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதை அவன் ஏற்றுக் கொள்கிறானா இல்லையா என்பதை நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Karthi, Actress Trisha, Ponniyin selvan