ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Suriya 42: சூர்யா - சிறுத்தை சிவா படத்தில் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்!

Suriya 42: சூர்யா - சிறுத்தை சிவா படத்தில் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்!

கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சூர்யா

கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சூர்யா

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தோடு யூ.வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளார்.

நடிகர் சூர்யா - இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் படத்தின் அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் பிசியானார் சிவா.

இதன் காரணமாக சூர்யாவின் படத்திற்கான வேலைகள் தொடங்காமல் இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கியது.  சில நாட்கள் மட்டும் இங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கினர்.

அதில் 200 பவுன்சர்கள் கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு படத்தின் நாயகி பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கோவாவில் நடைபெற்று வந்த சூர்யா 42 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தோடு யூ.வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே சமயம் 3D தொழில்நுட்பத்திலும் படத்தை உருவாக்குகின்றனர். மேலும் 10-ம் மேற்பட்ட மொழிகளில் சூர்யா 42 படத்தை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... கார்த்தி ரசிகர்களுக்கு நியூ அப்டேட்... வெளியானது சர்தார் படத்தின் சென்சார் சான்றிதழ்!

இந்நிலையில் இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 2009-ம் ஆண்டு வெளியான 'ஆதவன்' படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாருக்கு சூர்யாவுடன் இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director K.S.Ravikumar