Home /News /entertainment /

குருநாதர் விக்ரமன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் சிஷ்யன் கே.எஸ்.ரவிக்குமார்!

குருநாதர் விக்ரமன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் சிஷ்யன் கே.எஸ்.ரவிக்குமார்!

ஹிட் லிஸ்ட் பட பிரஸ்மீட்

ஹிட் லிஸ்ட் பட பிரஸ்மீட்

குருநாதர் விக்ரமனின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தும் சிஷ்யன் கே.எஸ்.  ரவிக்குமார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திரைப்படங்களை ஓ.டி.டியில் பார்க்க ரசிகர்கள் பழகி விட்டனர் என கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே.எஸ். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, என்பவரை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். Hit List என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்குகிறனர்.

இந்த திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர்களை தவிர, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், எஸ்.ஏ. சந்திரசேகர், கார்த்திக் சுப்புராஜ், ஏ.எல்.விஜய், லிங்குசாமி உள்ளிட்டப் பல முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். ஹிட் லிஸ்ட் பூஜைக்கு பின் தன்னுடைய படக்குழுவினரை அறிமுகப்படுத்தி பேசிய கே.எஸ்.ரவிக்குமார்,  இதற்கு முன் தயாரித்த கூகுள் குட்டப்பா திரைப்படம் திரையரங்கில் வசூல் செய்யவில்லை. ஆனால் ஓ.டி.டி. உள்ளிட்ட மற்ற வியாபாரங்களில் வெற்றியடைந்தது. அது தனக்கு லாபகரமான திரைப்படம் என கூறினார்.

இளையராஜாவுடனான வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

அத்துடன் திரைப்படங்களை கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஓ.டி.டியில் பார்த்து பழகிவிட்டனர். எனவே பெரிய திரைப்படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளுக்கு வர அவர்கள் எண்ணுகின்றனர். இந்த சூழலில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து இயக்குவது முக்கியம்.  அந்த வகையில் ஹிட் லிஸ்ட் திரைப்படம் இருக்கும் என தெரிவித்தார். அத்துடன் குருநாதர் விக்ரமனின் மகனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாயகனாக்க வேண்டியது. ஆனால் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. விஜய் கனிஷ்கா நல்ல நடிகராக வருவார். இந்த திரைப்படத்திற்கான போட்டோ ஷூட் செய்தபோது அவரின் நடிப்புத் திறன் தெரியவந்தது. முறையாக நடிப்பு கற்றுக்கொண்டு நாயகனாக அறிமுகமாகிறார் எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிமாறனின் விடுதலை படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

இந்த திரைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆஸ்தான நடிகரான சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கே.எஸ்.ரவிக்குமார் கூறினார். இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் விக்ரமன், தன்னுடைய புது வசந்தம் திரைப்படம் 1989-ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. அந்த நாளில் கூட எனக்கு பயமாக இல்லை. ஆனால் என் மகன் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜையில் நெர்வஸாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் கனிஷ்காவிற்கு கதை கேட்டு கொண்டிருந்தபோது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார். அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம் எனவும் நெகிழ்ந்தார். இறுதியாக நாயகன் விஜய் கனிஷ்கா பேசுவையில் அனைவரின் நம்பிக்கையும் நிறைவேற்றும் வகையில் நடிப்பேன் என கூறினார்.

 
Published by:Shalini C
First published:

Tags: Director K.S.Ravikumar, Tamil Cinema

அடுத்த செய்தி