தமிழ்திரை உலகின் கமர்சியல் பட ஸ்பெசலிஸ்ட், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்த நாளான இன்று அவரின் திரைப் பயணம் பற்றிய பதிவு.
‘புது வசந்தம்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வந்த முதல் திரைப்படமானது ‘புரியாத புதிர்’. ”ஐநோ...ஐநோ..” என்ற ஒற்றை டயலாக்கை ரகுவரன் தொடர்ந்து பேச செய்து தனது முதல் திரைப்படத்திலேயே கவனிக்கதக்க இயக்குனர் ஆனார கே.எஸ்.ரவிகுமார். இவருக்கு அடையாளம் தந்த திரைப்படமாக அமைந்தது ’சேரன் பாண்டியன்’. சரத்குமார் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க, ‘சேரன் பாண்டியன்’ மிகப் பெரிய வெற்றியை பெற்றது. கிராமத்து திரைப்படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட் என்று சொல்லும் அளவுக்கு கே.எஸ்.ரவிகுமாரை பேச செய்தது ’நாட்டாமை’. சரத்குமார், மீனா, விஜயகுமார், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படம் இன்றளவும் கிளாஸிக்காக கொண்டாடப்படுவதை பார்க்கலாம்.
’நாட்டாமை’ திரைப்படத்தின் வெற்றி, கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினிகாந்தை வைத்து ’முத்து’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. ’முத்து’ திரைப்படம், இவரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக ஆக்கியதோடு மட்டுமில்லாமல், ரஜினியையும் ஜப்பான் வரை கொண்டு சென்றது.ரஜினிகாந்துடன் ஒரு பக்கம் நட்புடன் நடை போட்ட கே.எஸ்.ரவிக்குமார் கமலஹாசனுடனும் கை கோர்த்தார். கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவந்த ‘அவ்வை சண்முகி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் ‘தெனாலி’. ‘பஞ்ச தந்திரம்’, ‘ தசாவதாரம்’ என தொடர்ந்து கமல்ஹாசனுடன் கை கோர்த்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

கே. எஸ் ரவிக்குமார்
முத்து திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் என இரு இமயங்கள் இணைந்து நடித்த ‘படையப்பா’ மற்றும் ‘லிங்கா’ என இரு திரைப்படங்களை இயக்கினார் கே.எஸ்.ரவிக்குமார். இதில். ‘படையப்பா’ திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
ரஜினிகாந்த்... கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்கள் ஒருபுறம் என்றால் மற்றொரு புறம், விஜய், அஜித், சூர்யா என இளம் தலைமுறையின் முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே.. விஜயை வைத்து இவர் இயக்கிய ‘மின்சார கண்ணா’, மற்றும் அஜீத்தை வைத்து இவர் இயக்கிய ‘வில்லன்’. ‘வரலாறு’ திரைப்படங்கள் முறையே இருவரது வெற்றி திரைப்படங்களில் ஐக்கியமாகி கமர்ஷியல் வெற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை இன்றைய தலைமுறை ரசிகர்களும் கொண்டாடச் செய்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.