ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KRK movie : லவ் பண்ணும் போதே நயனிடம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’கதையை சொன்ன விக்கி!

KRK movie : லவ் பண்ணும் போதே நயனிடம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’கதையை சொன்ன விக்கி!

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

KRK movie Kaathuvaakula Rendu Kaadhal: இந்த வருடமே விக்கி - நயனுக்கு கல்யாணமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விஜய் சேதுபதி நயன்தாரா,சமந்தா நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது. எல்லா தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நேரத்தில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டியும் தற்போது வைரலாகி வருகிறது.

  தமிழ் சினிமாவில் தனக்கென தனி ட்ரெண்ட் செட்டரை அமைத்து அதன் வழியே பயணித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கே மிகப் பெரிய ஹிட் அடிக்க அடுத்தடுத்து டீசர், சிங்கிள்ஸ் என வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இறுதியாக வெளியான ட்ரெய்லர் இளைஞர்களை பெரிதளவில் கவர, திட்டமிட்டப்படி ஏப்ரல் 28 இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

  KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!

  படம் குறித்த விமர்சனங்கள் ஒருபக்கம் வந்துக் கொண்டிருக்க, இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் பேட்டியும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. விஜய் சேதுபதியும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து அளித்திருக்கும் அந்த பேட்டியில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை நயன் தாராவிடம் எப்போது விக்கி சொன்னார் என்ற சுவாரஸ்யமான தகவலும் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும்போதே விக்கியும் நயனும் டின்னர் சென்று இருக்கின்றனர்.அதுதான் அவர்களின் காதல் தொடங்கிய புதுசு.

  ' isDesktop="true" id="737216" youtubeid="oqEsncqQQqA" category="cinema">

  அப்போது தான் நயனிடம் விக்கி இந்த படத்தின் கதையை சொன்னாராம். நானும் ரவுடி தான் படத்திற்கு முன்பே விக்கி இந்த கதையை ரெடி செய்து வைத்திருக்கிறார். படத்தில் வரும் கண்மணி ரோலை நயன் தான் செய்ய வேண்டும் என்பதில் விக்கி உறுதியாக இருந்தாராம். கடைசியில் இருவரும் கல்யாணத்திற்கு முன்பு ஒரு சூப்பரான படமாக இந்த படத்தை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டார்களாம். 2016ல் இதற்கு பிளான் செய்தவர்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் வர, பின்பு கொரோனா காரணமாக படத்தை தள்ளிப்போட்டனராம்.

  கடைசியில் ஒருவழியாக 2022ல் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அப்படியென்றால், இந்த வருடமே விக்கி - நயனுக்கு கல்யாணமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். ஆனால் அதற்கான பதில் விக்னேஷ் சிவன், நயன் தாராவுக்கு மட்டுமே தெரியும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Vijay Sethupathi, Actress Samantha, Director vignesh shivan, Kaathu Vaakula Rendu Kadhal, Nayanthara, Tamil movies