Home /News /entertainment /

டொவினோ தாமஸின் 'வாஷி' படத்தை முடித்த கீர்த்தி சுரேஷ்!

டொவினோ தாமஸின் 'வாஷி' படத்தை முடித்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

, கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிப்பதாக முடிவாகி படப்பிடிப்பு தொடங்கியது. விஷ்ணு ஜி. ராகவ் படத்தின் இயக்குனர். இதன் டைட்டிலை மோகன்லால் வெளியிட்டார்.

டொவினோ தாமஸுடன் முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் வாஷி. இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இது கீர்த்தி சுரேஷின் குடும்பப் படம்.

முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. மேனகாவின் கணவர் அதாவது கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார் மலையாளத்தின் பிரபலமான தயாரிப்பாளர். பல படங்களை தயாரித்துள்ளார். சமீபமாக படத்தயாரிப்பில் இருந்து விலகி இருந்தவர் சென்ற வருட இறுதியில் வாஷி என்ற படத்தை தனது ரேவதி கலாமந்திர் தயாரிப்பதாக அறிவித்தார்.

இதையும் படிங்க.. கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!

இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிப்பதாக முடிவாகி படப்பிடிப்பு தொடங்கியது. விஷ்ணு ஜி. ராகவ் படத்தின் இயக்குனர். இதன் டைட்டிலை மோகன்லால் வெளியிட்டார்.




படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் குமார் என பெயரிட்டாலும் பணம் கீர்த்தி சுரேஷினுடையது. தயாரிப்பு பொறுப்பை கவனித்துக் கொண்டது கீர்த்தியின் அக்கா ரேவதி. இவர் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவருக்கு சொந்த மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கும் வகையிலும் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. வாஷியின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர். இறுதி நாளில் டொவினோ தாமஸ், இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Keerthy suresh, Movies

அடுத்த செய்தி