• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சாதி, உடை குறித்து பேசி வில்லங்கத்தில் மாட்டிக் கொண்ட வில்லன் நடிகர்

சாதி, உடை குறித்து பேசி வில்லங்கத்தில் மாட்டிக் கொண்ட வில்லன் நடிகர்

கோட்டா சீனிவாச ராவ்

கோட்டா சீனிவாச ராவ்

தமிழில் சாமி, திருப்பாச்சி, கோ, சகுனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.

  • Share this:
    தமிழில் வில்லன் நடிகராக வலம் வந்த கோட்டா சீனிவாச ராவ், சாதி மற்றும் நடிகை ஒருவரின் உடை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

    தமிழில் சாமி, திருப்பாச்சி, கோ, சகுனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ். நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கோட்டா சீனிவாச ராவ் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். பிரகாஷ் ராஜ் அணியைச் சேர்ந்த நடிகர் நாக பாபு, கோட்டா சீனிவாச ராவுக்கு கடும் எதிர்வினையை பதிவு செய்திருந்தார்.

    இந்நிலையில் நேர்க்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட கோட்டா சீனிவாச ராவ், ”கம்மா சமூகத்துக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஏனெனில் எனது வாழ்க்கையில் நான் உண்ட 95 சதவீத உணவு அந்த சமூகத்தின் காரணமாக எனக்கு கிடைத்தது. அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு உணவளித்திருக்கின்றனர். இதனால் நான் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் சாப்பிட்ட 95% உணவு அவர்களால் கிடைத்தது என்றால், மீதமுள்ள 5% ரெட்டி மற்றும் ராஜூஸ் சமூகங்களிடம் இருந்து கிடைத்தது. இந்த உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை” என்றதோடு, நடிகர் நாக பாபு மீது சாதி ரீதியாக கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

    அதே நேர்க்காணலில், தெலுங்கு சேனல் ஒன்றின் நிகழ்ச்சி குறித்துப் பேசியவர், “அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை அனுசுயா பரத்வாஜ் ஒரு திறமையான நடிகை. அவர் அழகான நடிகை மட்டுமல்ல, மிகவும் வெளிப்படையான நடிகையும் கூட. ஆனால் தனிப்பட்ட முறையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் ஆடை அணிவது எனக்குப் பிடிக்கவில்லை. அதே நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகை ரோஜா நன்றாக உடையணிந்துள்ளார், ஆனால் அனுசுயாவின் ஆடை எனக்கு பிடிக்கவில்லை" என்றார்.

     

    Kota Srinivasa Rao controversial casteist talk,  Anasuya Bharadwaj dressing, kota srinivasa rao, kota srinivasa rao movies, kota srinivasa rao son, kota srinivasa rao awards, kota srinivasa rao son accident bike photos, kota srinivasa rao net worth, kota srinivasa rao age, kota srinivasa rao family, kota srinivasa rao health, kota srinivasa rao brother, anasuya bharadwaj age, anasuya bharadwaj family, anasuya instagram, anasuya bharadwaj latest jabardasth photos, anasuya bharadwaj cast, anasuya bharadwaj phone number, anasuya bharadwaj images, கோட்டா சீனிவாச ராவ், அனுசுயா பரத்வாஜ், கோட்டா சீனிவாச ராவ் சர்ச்சை
    அனுசுயா


    ஆடை என்பது தனிப்பட்டவரின் விருப்பம் என்பதை உணர்த்த நெறியாளர் முயன்ற போதும், அதற்கு கோட்டா சீனிவாச ராவ் ஒத்துழைப்பை நல்கவில்லை. இந்நிலையில் தற்போது ”நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என சிலர் வன்மமாக பேசியிருப்பது கவலை அளிக்கிறது” என அனுசுயா தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: