அரசியல் தலைவர்களை நையாண்டி செய்யும் ‘கோஸ்டி’

கோஸ்டி பட ஃபர்ஸ்ட் லுக்

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படம் கோஸ்டி. அரசியல் நையாண்டி திரைப்படமாக இது தயாராகிறது.

  • Share this:
அரசியல், சாதி, மதம்... இந்த மூன்றும்தான் சினிமாவிலும் செல்லுபடியாகிறது. ரொம்ப ஆழமாக எல்லாம் செல்ல வேண்டியதில்லை. வாட்ஸ் அப் மூளையை வைத்து மேலோட்டமாக இவற்றை தூவித்தந்தாலே போதும்... படம் ஹிட். கல்யாணின் கோஸ்டி படத்தில் காஜல் அகர்வால்தான் நாயகன், நாயகி எல்லாம். போலீஸ் அதிகாரியாக வருகிறாராம். இவர் தவிர யோகி பாபு, சுரேஷ் மேனன், ஊர்வசி, சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன் என பலர் நடிக்கின்றனர்.

கோஸ்டியின் பர்ஸ்ட் லுக்கை பாராளுமன்ற பின்னணியில் பிரபல அரசியல் தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டது போல் வடிவமைத்துள்ளனர். காஜல் அகர்வாலை அம்மா, சின்னம்மா என்று இரண்டு பேருடனும் ஒப்பிடலாம், அப்படியொரு தோற்றம். கே.எஸ்.ரவிக்குமார் அப்படியே எடப்பாடி பழனிச்சாமி. சந்தானபாரதி அச்சு அசலாக அமித்ஷா. பெண் வேடத்தில் தமிழிசையை நினைவுப்படுத்துகிறார் ராஜேந்திரன்.

விளம்பரத்துக்காக முதல்பார்வையை இப்படி வடிவமைத்திருந்தாலும், இந்த அரசியல் தலைவர்களுக்கும் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். சீட் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.
Published by:Sheik Hanifah
First published: