ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூவி டைம்: Memories of Murder! கற்பழிப்பு கொலைகள்! 33 ஆண்டுகள்.. போலீசாரை அலறவைத்த சீரியல் கில்லரின் கதை!

மூவி டைம்: Memories of Murder! கற்பழிப்பு கொலைகள்! 33 ஆண்டுகள்.. போலீசாரை அலறவைத்த சீரியல் கில்லரின் கதை!

memories of murder

memories of murder

மூவி டைம் பகுதியில் இன்று நாம் பார்க்கக்கூடிய படம் Memories of Murder.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சைக்கோ கொலையாளிகளின் கதை உலகெங்கும் உண்டு. திரைப்படங்களை மிஞ்சக்கூடிய எத்தனையோ உண்மைக்கதைகளை உலகம் கண்டிருக்கிறது. பல கதைகள் சினிமாகவும் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் தென் கொரியாவையே உலுக்கிய தொடர் கற்பழிப்பு கொலைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் Memories of Murder.

உண்மைக்கதை..

80களில் தென் கொரியாவில் தொடர்ந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டு வித்தியாசமான முறையில் கொலை செய்யப்பட்டது அந்நாட்டு காவல்துறைக்கு பெரிய தலைவலியைக் கொடுத்தது. யார் அந்த சைக்கோ கொலைகாரன் என போலீசார் ஒருபுறம் தேடினாலும் கொலைகள் தொடந்துகொண்டே இருந்தன. ஓராண்டு இரு ஆண்டுகள் இல்லை. 1986 முதல் 1991 வரை கிட்டத்தட்ட 10 பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: மூவி டைம் : பக்கா த்ரில்லர்! ஒவ்வொரு சீனும் அல்லு விடும்! அலறவிடும் Fall மூவி!

கொலையாளியை தேடித்தேடி அலுத்தப்போய்விட்ட நிலையில் அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2004ல் அதே மாதிரியான ஒரு கொலை நடக்கவே மீண்டும் போலீசார் பழைய வழக்கை தூசு தட்டினர். மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் 2019ல் குற்றவாளியை கண்டுபிடித்தனர். இப்படியாக 33 ஆண்டுகள் ட்ராவல் செய்து ஒரு கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்குக்காக விசாரணைக்கான ஒரு சட்டத்தையே அந்நாட்டு அரசு மாற்றியது. இப்படி பல திடுக் விஷயங்களை சினிமாக உருவாக்கினார் இயக்குநர் Bong Joon Ho.

' isDesktop="true" id="814190" youtubeid="0n_HQwQU8ls" category="cinema">

கதை என்ன?

தென் கொரியாவின் ஒரு கிராமத்தில் தொடர்ந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யபடுகிறார்கள். மழை, சிவப்பு ஆடை, கொலை செய்யப்படும் பெண்ணின் வாய் உள்ளாடையால் கட்டப்படுவது என இந்தக் கொலைகள் கொடூரமாகவும் ஒரே பேட்டனிலும் இருக்கிறது. பல்வேறு விசாரணைகள், பல்வேறு சந்தேகங்கள் என விசாரணையை தீவிரப்படுத்தும் இரு போலீசார் கொலையாளியை கண்டுபிடித்தார்களா? எப்படி நெருங்கினார்கள்? கொலையாளி சிக்கியதற்கு கிடைத்த துப்பு என்ன என இந்த திரைப்படம் பக்கா த்ரில்லர் இன்வெஸ்டிகேஷனாக இருக்கும்.

Murder of Memories

இந்தப்படத்தின் உண்மைக்கதையில் 33 ஆண்டுகள் கழித்தே குற்றவாளி சிக்கினான். அதாவது படம் ரிலீஸாகும்போதுகூட குற்றவாளி சிக்கவில்லை. அப்படி இருக்கையில் படத்தில் காட்டப்பட்ட க்ளைமேக்ஸ் என்னவென்பதே ரசிகர்களின் ஆர்வத்துக்கு தீனிபோடும். ஓடிடி ப்ளாட்பார்மில் இந்தப்படம் இல்லை என்பதால் இணையத்தில்தான் தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்.

Published by:Murugadoss C
First published:

Tags: Movie review, Movies