ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கொரியாவின் ட்ரெய்ன் டூ பூஸன்

ட்ரெயின் டூ பூஸன்

இந்தப் படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை நியூ லைன் சினிமா வாங்கியுள்ளது.

 • Share this:
  தென்கொரியாவில் தயாரான பல படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இப்போது ட்ரெய்ன் டூ பூஸனையும் ரீமேக் செய்கின்றனர்.

  ட்ரெய்ன் டூ பூஸன் ஒரு ஸாம்பி திரைப்படம். தந்தை ஒருவர் தனது மகளுடன் பூஸனுக்கு பயணப்படுகிறார். அப்போது அந்த நாடே ஸாம்பிக்களின் தாக்குதலில் பாதிக்கப்படுகிறது. ட்ரெய்னில் இருப்பவர்களையும் ஸாம்பிக்கள் தாக்க முற்படுகிறார்கள். பணம், பிசினஸ் என அலைந்து கொண்டிருக்கும் அந்த தந்தை மனித உணர்வுகளை தெரிந்து கொள்வதை உணர்ச்சிப்பூர்வமாக படம் சொல்லியது. ஆக்ஷனுடன், சென்டிமெண்ட் சரி விகிதத்தில் கலந்து படத்தை பம்பர் ஹிட்டாக்கியது.

  Sang-Ho Yeon இயக்கியிருந்த இந்தப் படத்தை 2016 கான் திரைப்பட விழாவில் முதலில் வெளியிட்டார்கள். தென்கொரியாவில் அந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையும் இதற்கு கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் அதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமும் இதுவே.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தப் படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை நியூ லைன் சினிமா வாங்கியுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த பிரபல இயக்குனர் Timo Tjahjanto ஐ வைத்து படத்தை ரீமேக் செய்கின்றனர். ரீமேக் தகவல் வெளியானதும், ரசிகர்கள், ட்ரெய்ன் டூ பூஸனை ரீமேக் செய்யாதீர்கள் என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். தென் கொரியாவின் புகழ்பெற்ற ஓல்டு பாய் போன்ற படங்களை ஹாலிவுட்டில் ரீமேக் என்ற பெயரில் கொத்துக்கறிப் போட்டதால் இந்த பயம்.

  கொரிய படத்தின் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அதே நுட்பத்துடன் ஹாலிவுட் ரீமேக்கில் இடம்பெறுமா என்பது சந்தேகமே.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: