தெலுங்குப் படமான ஆச்சார்யா படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் நீக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து, ஆச்சார்யா படத்தின் இயக்குநர் கொரடலா சிவா, ஏபிஎன் எண்டர்டெயின்மென்ட்டுக்கு அளித்த பேட்டியில், தெளிவான முடிவு இல்லாத ஒரு பாத்திரத்தில் அந்தஸ்துள்ள ஒரு நடிகையை நடிக்க வைப்பது சரியாக இருக்காது என்று தான் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
தர்மஸ்தலியை (படத்தின் கதை அமைந்துள்ள இடம்) பூர்வீகமாக கொண்ட ஒரு வேடிக்கையான பாத்திரத்தில் காஜல் தோன்றுவார் என்று தான் முதலில் நினைத்ததாக இயக்குனர் தெரிவித்தார். “பொதுவாக ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே காதல் இருக்கும். ஆனால் இந்த படத்தில், ஆச்சார்யாவின் கதாபாத்திரத்திற்கு காதல் ஆர்வம் இல்லை இருக்கவும் கூடாது. முதல் ஷெட்யூலின்போதே எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் கமர்ஷியல் ஃபார்மேட்டில் எப்போதும் ஹீரோயின் இருப்பதால், முதல் ஷெட்யூலில் காஜலுடன் மூன்று முதல் நான்கு நாட்கள் படப்பிடிப்பு பணியை செய்தோம்” என்று பேட்டியில் கூறினார் இயக்குநர்.
இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட பிறகு, தங்களின் கதையை மறுபரிசீலனை செய்ய அவர்களுக்கு நேரம் கிடைத்ததால், தெளிவான முடிவு இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் இத்தகைய முன்னணி நடிகையை நடிக்க வைப்பதில் தயக்கம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
சினிமாவில் அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்?
”திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சும்மா பேச்சுக்கு காஜலின் கதாபாத்திரம் இருக்க முடியாது என்பதை உணர்ந்து, இதை சிரஞ்சீவியிடம் சொன்னபோது, உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள், ஆனால் நேர்மையாக இருங்கள் என்றார்.
நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருவது தயாரிப்பாளர்களின் விருப்பம் - மணிரத்னம்!
அதனால் காஜலிடம், அதிக முக்கியத்துவமோ, சரியான முடிவுரையோ, பாடல்களோ இல்லாத கேரக்டரில் பெரும் அந்தஸ்துள்ள கதாநாயகியை சாதாரணமாக பயன்படுத்த நான் விரும்பவில்லை என்று விளக்கினேன். அந்த நேரத்தில் நாங்கள் அதிகம் படமெடுக்கவில்லை. நான் சொன்னதைக் சேட்ட காஜல், சிரித்துக்கொண்டே, அந்தப் படத்தைத் தான் மிஸ் செய்வதாக சொன்னார். ஆனால் நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார் இயக்குநர் கொரடலா சிவா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.