Kollywood Vs Tollywood: தென்னிந்திய சினிமாவுக்கு டோலிவுட், இந்திய சினிமாவுக்கு கோலிவுட் - ரசிகர்களால் களேபரமான ட்விட்டர்

கோலிவுட்

நெட்டிசன்களின் மோதல்கள், பிரபலங்களின் சர்ச்சை கருத்துகள், உலகளவில் ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்துவது என ட்விட்டர் பெரும் பங்கு வகிக்கிறது.

  • Share this:
    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ட்விட்டரில் தீவிர சண்டை நடந்து வருகிறது.

    நெட்டிசன்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த கிடைத்த சூடான இடம் ட்விட்டர். டிஜிட்டல் உலகின் வளர்ச்சியில், ட்விட்டர் ஒருபோதும் நம்மை ஆச்சரியப்படுத்தவும் மகிழ்விக்கவும் தவறியதில்லை. நெட்டிசன்களின் மோதல்கள், பிரபலங்களின் சர்ச்சை கருத்துகள், உலகளவில் ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்துவது என ட்விட்டர் பெரும் பங்கு வகிக்கிறது. சமீபத்தில் கூட, அஜித்தின் வலிமை ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாக இருந்தது.

    இதைத் தொடர்ந்து தற்போது ட்விட்டரில் மற்றொரு மோதல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் TwoodDominatingsouth என்ற ஹேஷ்டேக்குடன் படங்களை ட்வீட் செய்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட ரசிகர்கள் KwoodDominateIndia என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளனர். தெலுங்கு திரைப்பட ஆர்வலர்கள் இந்த ட்ரெண்டிங்கை தொடங்கினாலும், இப்போது கோலிவுட் ரசிகர்களின் ட்வீட்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஹேஷ்டேக் இப்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதோடு சிறந்த நடிகர்களின் படங்களுடன் பல மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள். இந்த போரில் யார் வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: