முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விக்ரம் – கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் வெளியாவது எப்போது? கோலிவுட்டில் பரவும் புதிய தகவல்

விக்ரம் – கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் வெளியாவது எப்போது? கோலிவுட்டில் பரவும் புதிய தகவல்

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம்

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம்

கடந்த 25-ஆம் தேதி ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டு கோலிவுட்டை பரபரப்புக்கு உள்ளாக்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் துருவ நட்சத்திரமும் ஒன்று. இந்த படம் கடந்த 2017-இல் ஆரம்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. 5 ஆண்டுகள் கடந்த பின்னரும், சில காரணங்களால் இந்தப் படம் வெளியிடப்படாமல் உள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் ஐஷ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்பை ஆக்சன் ஜானரில் துருவ நட்சத்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேக்கிங் மற்றும் திரைக்கதையில் கவுதம் மேனன் மிரட்டுவார் என்பதாலும், விக்ரமின் நடிப்பு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை உள்ளிட்டவற்றால் இந்த படத்தின்  மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 25-ஆம் தேதி ஹாரிஸ் ஜெயராஜ், துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டு கோலிவுட்டை பரபரப்புக்கு உள்ளாக்கினார். அவர் தனது ட்விட்டர் பதிவில், துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசைப் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் 19ஆம் தேதி இந்தப் படம் வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடப்படவுள்ளனர். விக்ரம் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார். அடுத்த பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது விக்ரம், பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

First published:

Tags: Gautham Vasudev Menon, Harris Jayaraj, Vikram