எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3வது முறையாக அஜித் நடிக்கவுள்ளார். ஏ.கே.61 என்று பரவலாக அழைக்கப்படும் இந்தப் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா பிரச்னை ஏற்படாவிட்டால் இந்நேரம் வலிமை திரைப்படம் கடந்த 13-ம்தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். கொரோனா பார்த்த வேலையால், தமிழ் சினிமாவில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. எந்தப் படத்தை எப்போது ரிலீஸ் செய்வது, எப்போது படப்பிடிப்பை தொடங்குவது என்ற உறுதியற்ற தன்மை கோலிவுட்டில் காணப்படுகிறது.
இதையும் படிங்க :
H.Vinoth : அஜித் படங்களில் இதுவரை இல்லாத மாஸ் காட்சிகள் வலிமையில் இருக்கும்... எச்.வினோத் பேட்டி
இதற்கிடையே அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பூஜை தினத்தன்றே டைட்டில் வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. படத்தில் அஜித்திற்கு நெகடிவ் ரோல் என்று இயக்குனர் எச். வினோத் கூறியிருந்தார்.
இந்நிலையில், படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
இதையும் படிங்க :
விக்ரமின் 'மகான்' படத்துடைய கதை இதுதானா? எதிர்பார்ப்பை தூண்டும் ஓடிடி தளத்தின் பதிவு
22 ஆண்டுகளுக்கு முன்பு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடித்திருப்பார். இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளும், என்ன சொல்லப் போகிறார் என்ற பாடலும் ரசிகர்களை இன்றளவும் கவர்ந்து வருகின்றன. தபு தற்போது வெப்சீரிஸ், இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.