முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம்... அடுத்து என்ன நடக்கும்?

ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம்... அடுத்து என்ன நடக்கும்?

ஜெய் பீம்

ஜெய் பீம்

ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகும் படங்களின் பட்டியல் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும். ஆஸ்கர் விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் வரும் மார்ச் 27-ம் தேதி நடக்கிறது.

  • Last Updated :

ஆங்கில திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அக்காடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் உலக அளவில் திரைப்படங்களுக்கான மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆஸ்கர் திரைப்படங்களுக்கான போட்டியில் பங்கேற்பதே பெருமைக்குரிய விஷயமாகும்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் பிற மொழி திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. பெரும்பாலும் இந்த விருதினை ஈரானிய திரைப்படங்கள் வென்று வரும் நிலையில் அண்மைக்காலமாக இந்த போட்டிக்கு இந்திய திரைப்படங்களும் தேர்வாகி வருகின்றன.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவிலிருந்து லகான் உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் இதுவரை தேர்வாகியுள்ள நிலையில், இந்த முறை இந்தப் பிரிவில் கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது. இறுதிக்கட்டத்தில் இந்த பிரிவில் போட்டியிடும் தகுதியை கூழாங்கல் திரைப்படம் இருந்து ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் இல்லாமல் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் நேரடியாக திரைப்படங்கள் ஆஸ்கர் கமிட்டிக்கு திரையிடப்பட்டு பின்னர் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் நடைமுறையும் இருந்து வருகிறது.

எந்த திரைப்படத்தையும் உரிய முறையில் அணுகினால் திரையிட முடியும் என்ற சூழலில் ஏற்கனவே இதுபோல ஒத்த செருப்பு, சூரரைப்போற்று உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் ஆஸ்கர் கமிட்டிக்கு திரையிடப்பட்டுள்ளன. அந்தவகையில் திரையிடப்பட்டுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து ஆஸ்கர் பரிந்துரை குழுவினர் இந்த திரைப்படத்தை பரிந்துரைக்காக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்... வைரலாகும் வீடியோ

ஒட்டுமொத்தமாக 276 திரைப்படங்கள் இந்த வகையில் பரிசீலனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பரிசீலனை பட்டியலில் சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் ஜெய்பீம் திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இடம் பிடிப்பதே கௌரவமாக பார்க்கப்படும் நிலையில் இதிலிருந்து உலகம் முழுவதும் உள்ள நடுவர்களின் தேர்வின் அடிப்படையில் ஆறிலிருந்து எட்டு திரைப்படங்கள் இறுதிக் கட்டத்திற்கு தேர்வாகும்.

பிப்ரவரி மாத இறுதியில் இந்த இறுதிப்பட்டியல் தயாராக உள்ள நிலையில் உலகம் முழுக்க உள்ள பல்வேறு நடுவர்களையும் இந்த திரைப்படத்தை படத்தயாரிப்பு நிறுவனம் பார்க்கச் செய்ய வேண்டும். படத்தை பார்க்கும் நடுவர்கள் குழு அளிக்கும் வாக்கின் அடிப்படையில் இறுதிப் பட்டியலுக்கு ஜெய் பீம் திரைப்படம் தேர்வு செய்யப்படும் என்பது தெரியவரும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இது இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்த படாத சாதனையாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களும் ஜெய் பீம் திரைப்படம் இறுதிக்கட்டத்திற்கு தேர்வு ஆக வேண்டும் என ஆவலோடும் நம்பிக்கையோடும் காத்துக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : வெப் தொடரை இயக்கும் வெற்றிமாறன்!

top videos

     ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகும் படங்களின் பட்டியல் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும். ஆஸ்கர் விருது விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் வரும் மார்ச் 27-ம் தேதி நடக்கிறது. அன்றைக்கு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    First published:

    Tags: Jai Bhim, Oscar Awards