• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அம்பலமாகும் போதைப்பொருள் சாம்ராஜ்யம் , பதற்றத்தில் கோலிவுட்... அடுத்து சிக்கப்போவது யார் ?

அம்பலமாகும் போதைப்பொருள் சாம்ராஜ்யம் , பதற்றத்தில் கோலிவுட்... அடுத்து சிக்கப்போவது யார் ?

Youtube Video

பாலிவுட் திரையுலகில் நடைபெறும் தொடர் கைதுகளுக்கு பின்னணியில் இருக்கும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் கன்னடம், தெலுங்கு, தமிழ் திரையுலகத்தையும் விட்டுவைக்கவில்லை.

 • Share this:
  நடிகர் சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை வழக்காக தொடங்கிய பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து இந்திய திரையுலகம் மொத்தத்தையும் சிலந்தி வலை போல பிணைத்துள்ளது. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா, சுஷாந்துக்கு போதைப் பொருள் விநியோகம் செய்திருக்கிறார் என்று கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோரும் போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியிருக்கிறார்கள். திரையுலகம் போதை பொருள் விற்பனை செய்வோரின் சொர்க்கபுரியாக திகழ்கிறதா?

  பாலிவுட், கன்னட திரையுலகைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பார்வை தெலுங்கு, தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.

  ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்துக்கும் போதைப் பொருள் சப்ளை மற்றும் பயன்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கருதுகின்றனர். இதுகுறித்து நாம் ஆராய தொடங்கியபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன.

  பாலிவுட்டில் பார்ட்டி என்றாலே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருக்கும்.

  அதுபோன்ற நிலை கோலிவுட்டில் இல்லாவிட்டாலும் தனித்தனி இளைஞர் குழுக்களாக சேர்ந்து போதைப் பொருட்களை எடுத்துக் கொள்ளும் பழக்கம் கோலிவுட்டில் உள்ளது என்கிறனர் திரையுலகினருடன் நெருங்கிய வட்டத்தில் இருப்போர்.

  குறிப்பாக முன்னணி நடிகர்கள் நேரடியாக ஈடுபடாமல் அவரது நண்பர்கள் மூலமாக போதைப் பொருள் வாங்குவதும் அதை வைத்து பார்ட்டி கொண்டாட்டங்கள் நடப்பதும் கோலிவுட்டில் நடைபெற்று வருகின்றன.

  கோலிவுட்டில் மறைமுகமாக நடைபெறும் போதைப் பொருள் விவகாரம் எப்படி வெளிவருகிறது என்று விசாரித்தால், நடிகர், நடிகைகளின் உடன் இருப்போரே வெளியிடுவதாக கூறுகிறார் துரை.

  இது ரகசிய விவகாரம் போலில்லாமல் மிக சர்வசாதாரணமாக பொது வெளியில் பேசும் போக்குதான் கோலிவுட்டில் இருந்து வருகிறது.

  கோலிவுட்டில் பயன்படுத்தப்படும் போதைப் பொருள் விவகாரம் இதுவரை வெளியே வந்ததே இல்லையா என்று கேட்டால் உண்டு என்கிறார் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி.

  குடிபோதையில் கார் விபத்தை ஏற்படுத்தினார் முன்னணி நடிகர் என்று எல்லாம் வரும் தகவல்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் சார்ந்ததுதான் என்ற அதிர்ச்சித் தகவலை முன் வைக்கிறார்.

  ஆனால் பணம், அதிகார பலத்தினால் அது குடிபோதை என்ற வழக்காக முடித்து வைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

  கோலிவுட்டில் நடைபெறும் போதைப் பொருள் விவகாரத்தில் பெரும்பாலும் நட்சத்திர வாரிசுகள் ஈடுபடுவதாக புள்ளி விவரங்களை பிஸ்மி அடுக்குகிறார்.

  அவர்களது அந்தஸ்து இது மாதிரியான பின்னணியில் அவர்களை கொண்டு போய் விடுகிறது என்றும் பிஸ்மி குற்றம் சாட்டுகிறார்.

  இன்று நேற்றல்ல சினிமாத்துறையில் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் போதைப் பொருள் கலாசாரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரசல் புரசலாய் வெளியே வந்தவண்ணமே இருக்கின்றன.

  சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு திரையுலகில் சார்மி, முமாய்த் கான், ரவி தேஜா உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர்.

  சுச்சி லீக்ஸ் என்று தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட விவகாரங்களும் போதைப் பொருள் தொடர்பானதுதான் என்கிறனர் திரையுலகுடன் நெருக்கத்தில் உள்ளவர்கள்.

  ஆனால் இவை அனைத்துமே சட்டென லைம் லைட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மூடி மறைக்கப்பட்டு விடுகிறது.

  பாலிவுட், கர்நாடக திரையுலகிலும் சாட்டையை சுழற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கோலிவுட் பக்கமும் பார்வையை திருப்புமா? சிக்குவார்களா திரையுலகின் Drug Mafia-க்கள்?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: