Home /News /entertainment /

தி கிரே மேனைத் தொடர்ந்து இன்னொரு ஹாலிவுட் படத்தில் இடம்பெறும் தனுஷ்...

தி கிரே மேனைத் தொடர்ந்து இன்னொரு ஹாலிவுட் படத்தில் இடம்பெறும் தனுஷ்...

ரூசோ பிரதர்ஸ் உடன தனுஷ்

ரூசோ பிரதர்ஸ் உடன தனுஷ்

The Gray Man : ரூசோ பிரதர்ஸ் தயாரித்து, இயக்கியுள்ள தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

    தி கிரே மேன் படத்தைத் தொடர்ந்து, இன்னொரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் இடம் பெற உள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

    ரூசோ பிரதர்ஸ் தயாரித்து, இயக்கியுள்ள தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் கோலிவுட் முன்னணி நடிகர் தனுஷும் இடம் பெற்றுள்ளார்.  இந்த படத்தில் தனுஷுக்கு அவிக் சன் (AVIK SAN) என்ற கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.

    வாய்ஸ் சரியில்லை என வாய்ப்பை இழந்த கமல்ஹாசன்!

    படம் நாளை வெளியாக உள்ள நிலையில், கடந்தவாரம் அமெரிக்காவிலும், நேற்று மும்பையிலும் இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரூசோ பிரதர்ஸ், தனுஷின் நடிப்பை வெகுவாக பாராட்டினர். தனுஷின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்த அவர்கள், இன்னொரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் கேரக்டர் இன்னும் அதிக காட்சிகள் நிறைந்ததாக வடிவமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதனால் அடுத்த ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



    ரூசோ பிரதர்ஸ் குறித்து, தனுஷ் பேட்டி அளித்துள்ளபேட்டியில், ரூசோ பிரதர்ஸ் சிறந்த டெக்னிசியன்கள் என்றும், எதனை படமாக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள் என்றும், நடிகர்களிடம் எதை வேண்டுமோ அதை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

    குழந்தை பிறந்த 1 மாதத்தில் ஷாக் கொடுத்த சூர்யா பட நடிகை!

    இதன் காரணமாக ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் சிரமம் ஏதுமின்றி, மிகவும் ஈஸியாக நடித்து முடித்ததாக தனுஷ் தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி