• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kaithi: கார்த்தியின் ’கைதி’ 2-ம் பாகத்திற்கும், ரீமேக் செய்வதற்கும் நீதிமன்றம் தடை

Kaithi: கார்த்தியின் ’கைதி’ 2-ம் பாகத்திற்கும், ரீமேக் செய்வதற்கும் நீதிமன்றம் தடை

கைதி

கைதி

நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜிவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

  • Share this:
    நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் பிற மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்யவும் கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது.

    2000-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் 2007-ஆம் ஆண்டு தான் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் ராஜிவ் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்பின் 2019-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் தமிழில் வெளியான கைதி படத்தை அண்மையில் ஊரடங்கில் பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜிவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

    இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: