Home /News /entertainment /

‘கொலை திரைப்படம் சர்வதேச தரத்தில் இருக்கும்’ – நடிகர் விஜய் ஆன்டனி…

‘கொலை திரைப்படம் சர்வதேச தரத்தில் இருக்கும்’ – நடிகர் விஜய் ஆன்டனி…

கொலை படத்தில் விஜய் ஆன்டனி

கொலை படத்தில் விஜய் ஆன்டனி

கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையில், சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில், செல்வாவின் கொலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொலை திரைப்படம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று நடிகர் விஜய் ஆன்டனி தெரிவித்துள்ளார்.

    பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் கொலை திரைப்படம் உருவாகவுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜேனரில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தில் மீனாட்சி சவுத்ரி, முரளி சர்மா, ராதிகா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் கொலை படத்தை தயாரித்துள்ளனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினி – விஜய் வீடுகளில் பறக்கும் தேசியக் கொடி…

    இந்த திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆன்டனி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

    கொலை படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.  இது இயக்குனர் பாலாஜியின் கனவு திரைப்படம். இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் நான் சொல்கிறேன், கொலை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கே.ஜி.எஃப்.2 இயக்குனர் – பாகுபலி பிரபாஸ் இணையும் சலார் படத்தின் அப்டேட்…

    இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ சினிமாவுக்கு புதியவர்கள். மிகுந்த அனுபவம் கொண்ட அவர்களுடன் பணியாற்றுவது நல்லஅனுபவத்தை கொடுத்தது. படத்தின் இசையும் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது. கிராஃபிக்ஸ் அருமையாக இருக்கிறது.



    நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையில், சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில், செல்வாவின் கொலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சுதந்திர தினத்தையொட்டி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay Antony

    அடுத்த செய்தி