Kodiyil Oruvan: கொரோனாவுக்கு பயப்படாத கோடியில் ஒருவன்!

Kodiyil Oruvan: கொரோனாவுக்கு பயப்படாத கோடியில் ஒருவன்!

கோடியில் ஒருவன்

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எட்டாயிரத்தை கடந்து வருகிறது. இந்திய அளவில் லட்சங்களில் செல்கிறது பாதிப்பு.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எட்டாயிரத்தை கடந்து வருகிறது. இந்திய அளவில் லட்சங்களில் செல்கிறது பாதிப்பு. குஜராத் போன்ற மாநிலங்களில் 24 மணி நேரமும் சுடுகாடுகள் ஓய்வின்றி இயங்குகின்றன. எந்த நேரத்திலும் அரசு லாக் டவுனை அறிவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோடையில் வெளியாவதாக இருந்த ஏராளமான திரைப்படங்களின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் திரையரங்குகள் இயங்காததும், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதும், கேரளாவில் இரவுக்காட்சியை ரத்து செய்யவிருப்பதாக அறிவித்திருப்பதும் முக்கிய காரணங்கள்.

    அதே நேரம், சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடும் கணக்காக கொரோனாவிலும் வருவோமில்லை என்று தைரியத்துடன் சில படங்கள் திரையரங்குக்கு வருகின்றன. ஏப்ரல் 23-ம் தேதி எம்ஜிஆர் மகன் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து மே 14 ரம்ஜானை முன்னிட்டு விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    அனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனியும், நாயகியாக ஆத்மிகாவும் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்க, என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் எடிட்டிங்.

    கோடியில் ஒருவன் மே 14-ம் தேதி வெளியாவதாக புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலிதா தனஞ்செயன் வெளியிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் தெலுங்கில் பம்பர் ஹிட்டானதால், கோடியில் ஒருவனை தமிழில் வெளியிடும் அதேநாள் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: