விஸ்வாசம் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது - கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்

விஸ்வாசம் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது - கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்
  • News18
  • Last Updated: September 8, 2019, 12:53 PM IST
  • Share this:
விஸ்வாசம் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது என்று கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பொங்களன்று அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் ரஜினி நடிப்பிப் பேட்ட ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் 2 படங்களும் வசூலில் சாதனை படைத்தது.

விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை சத்யஜோதியிடமிருந்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது. 8 நாட்களில் ரூ.125 கோடி வசூல் என்று இந்நிறுவனம் கூறியது.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், படத்தின் தயாரிப்பாளரிடம் படத்தை வாங்கிய நிறுவனம் வசூல் என்று ரூ.80 கோடியை தந்தது. அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் ரூ.125 கோடி வசூல் என்று அறிவித்தீர்களே என்று கேட்ட போது, அது சும்மா ரசிகர்களுக்காக சொன்னது. உண்மையான வசூல் இவ்வளவு தான் என்று படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னதாக’ கூறியுள்ளார்.இந்நிலையில் விஸ்வாசம் வசூல்  தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது' என்று தெரிவித்துள்ளது

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...