வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ₹ 5 லட்சம் நிதி அறிவித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ₹ 5 லட்சம் நிதி அறிவித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
பழனி மற்றும் குடும்பத்தினர்
  • Share this:
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது. இதில், துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தியே வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா(Kundan Kumar Ohja) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது,. பின்னர் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இதில் தமிழகம், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் வீரமரணத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் அவரது குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயனின் டாக்டர், அயலான், விஜய்சேதுபதியின் க.பெ/ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.



மேலும் படிக்க: கொரோனா காலத்தில் உதவிய நடிகர் சோனு சூட் - கடவுளாக வழிபட்ட மக்கள்
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading