• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'நான் அவ்வளவா அரசியல் பேச மாட்டேன்’ - கிருத்திகா உதயநிதி ஓபன் டாக்!

'நான் அவ்வளவா அரசியல் பேச மாட்டேன்’ - கிருத்திகா உதயநிதி ஓபன் டாக்!

கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி

அரசியல் குறித்த கேள்விக்கு கிருத்திகா உதயநிதி அளித்த பதில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    ’நான் அவ்வளவாக அரசியல் பேச மாட்டேன்’ என இயக்குநரும், உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கிருத்திகா உதயநிதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் நிகழ்ச்சி ஒன்று இன்றைய தினம் நடத்தப்பட்டது. திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்கு தேவையான தையல் மிஷின்கள், ஸ்டவ் ஆகியவற்றை நாங்கள் தந்துள்ளோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உதயநிதியின் அம்மாவை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம். முதலில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை செய்தது உதயநிதியின் முயற்சியால் தான். அதன் பின்னர் நாங்கள் திருநங்கைகளுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டுபிடித்தோம். அவர்களுக்கு தேவையானது நிறைய இருக்கின்றது, அதை எப்படி செயல்படுத்துவது அவர்களிடம் எப்படி உதவியை சேர்ப்பது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

    இப்போதுதான் ஒரு ஆரம்ப புள்ளி வைத்து இருக்கின்றோம், இதனை படிப்படியாக தமிழகம் முழுவதும் திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். உதயநிதியும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு செயலாக செய்வதில் இது ஒரு ஆரம்ப முயற்சி, விரைவில் தமிழகம் முழுவதும் இதனை சேர்ப்போம்” என்றும் கூறினார்.

    அப்போது கிருத்திகா உதயநிதியிடம் அரசியலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பது திமுகவின் கொள்கையாக உள்ளது. அந்த வகையில் திருநங்கைகளுக்கு இடம் கிடைக்கும் என நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, ‘இல்ல நான் அவ்வளவா அரசியல் பேச மாட்டேன்’ என்று சிரித்தபடியே பதிலளித்தார். அவருடைய இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: