இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் அடுத்தப் படத்தின் டைட்டிலும், முதல் பாடலும் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகராகவும், தயாரிப்பாளருமாக அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். இவரது மனைவி கிருத்திகா உதயநிதி.
பன்முகத் திறமை கொண்ட இவர், ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதன் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ படத்தை இயக்கினார். ஆனால், இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக வெற்றிப் பெறவில்லை.
எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!
பின்னர் கடந்த 3 வருடங்களாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் காளிதாஸ் ஜெயராமன் ஹீரோவாகவும், தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.
கயல் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்... இனி மராத்தியிலும் பார்க்கலாம்!
இந்தப் படத்தின் டைட்டிலும், முதல் சிங்கிளும் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.