ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

10 வருடங்கள் கழித்தும் அது மாறவில்லை... வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!

10 வருடங்கள் கழித்தும் அது மாறவில்லை... வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!

உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதி

2013 ஆகஸ்ட் மாதத்தில், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய உதயநிதியிடம், ”டின்னருக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டிருக்கிறார் கிருத்திகா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  9 வருடங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினும் அவரது மனைவி கிருத்திகாவும் ட்விட்டரில் பேசிக் கொண்டவைகள் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள 'கலகத் தலைவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கலகத் தலைவன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

  உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வலைதொடரை இயக்கி, பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

  இந்நிலையில் கடந்த 2013 ஆகஸ்ட் மாதத்தில், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய உதயநிதியிடம், ”டின்னருக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டிருக்கிறார் கிருத்திகா. அதற்கு, மிகக் கடினமான கேள்வி, என்ற உதய்க்கு, (ஏ) தோசை, (பி) தோசை, (சி) தோசை, (டி) தோசை என ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறார் கிருத்திகா.

  விடுமுறை ஓவர்... வாரிசு செட்டுக்கு திரும்பிய விஜய்!

  அதனை இப்போது நெட்டிசன் ஒருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து உலவ விட்டிருந்தார். அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த கிருத்திகா உதயநிதி, “10 வருடங்கள் கழித்தும் அதே ஆப்ஷன்கள்” தான் எனப் பதிவிட்டிருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema, Udhayanidhi Stalin