முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி விரைவில் திருமணம்?

சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி விரைவில் திருமணம்?

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் - கியாரா இருவரின் திருமண பேச்சு தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அவர்களின் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட் பிரபலங்கள் கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

பாலிவுட் நட்சத்திரங்கள் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதை அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சமீபத்தில் கியாரா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். துபாயில் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு சித்தார்த்தும், கியாராவும் சில தினங்கள் முன்பு மும்பை திரும்பினர்.

அவ்வப்போது சித்தார்த்தும் கியாராவும் பிரிந்து விட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகும். ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் இருக்கின்றன. மும்பையில் சித்தார்த்தின் வீட்டிற்கு கியாரா செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின.

அதிதி ஷங்கரை மறைமுகமாக தாக்கிய ஆத்மிகா?

இதையடுத்து சித்தார்த் - கியாரா இருவரின் திருமண பேச்சு தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அவர்களின் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக சினிமாவில் நடிகர் - நடிகை காதலித்து திருமணம் செய்துக் கொள்வது புதிதல்ல. அதுவும் பாலிவுட் திரையுலகைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    அந்த வகையில் பிரபல ஜோடி வரிசையில் சித்தார்த் - கியாரா இணைய தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

    First published:

    Tags: Kiara Advani, Siddharth