ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Kiara Advani: அந்நியன் இந்தி ரீமேக்கில் கியாரா அத்வானி?

Kiara Advani: அந்நியன் இந்தி ரீமேக்கில் கியாரா அத்வானி?

கியாரா அத்வானி

கியாரா அத்வானி

அந்நியன் இந்தி ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். ரன்வீர் சிங் இதில் நாயகனாக நடிக்க உள்ளார். நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை அணுகியுள்ளார் ஷங்கர். யார் இந்த கியாரா அத்வானி...?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அந்நியன் இந்தி ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். ரன்வீர் சிங் இதில் நாயகனாக நடிக்க உள்ளார். நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை அணுகியுள்ளார் ஷங்கர். யார் இந்த கியாரா அத்வானி...?

2014-ல் தனது 22 வது வயதில் திரையுலகுக்கு வந்தார் கியாரா அத்வானி. முதல் படம் இந்தியில் வெளியான ஃப்யூகிலி. நீரஜ் பாண்டேயின் ’எம்.எஸ் தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி’ படத்தில் தோனியின் மனைவியாக நடித்தார். இந்தப் படம் கியாரா அத்வானிக்கு புகழ் தேடித் தந்தது. இவரது இயர்பெயர் அலியா அத்வானி. சல்மான் கான் இந்தப் பெயரை கியாரா அத்வானி என மாற்றினார். பெயர் மாறிய ராசி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் தேடி வந்தன.

கொரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ’பரத் அனே நேனு’ படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடித்தார். படம் பம்பர் ஹிட். அதேபோல், பொய்யாபட்டி ஸ்ரீனுவின் வினய விதேய ராமா படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்தார். நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸிலும் கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷங்கர் தனது அந்நியன் இந்தி ரீமேக்கில் கியாரா அத்வானியை நடிக்க வைக்க அவரை அணுகியுள்ளார். நாயகனாக ரன்வீர் சிங் நடிக்கிறார். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், படத்தின் கதைக்கான உரிமையை சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியதாகவும், ஷங்கருக்கு அந்நியன் கதையில் எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த ஷங்கர், படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது. படத்தின் டைட்டிலிலேயே அப்படித்தான் வருகிறது. சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படத்தின் கதை எனக்கே சொந்தம் என்றார். ஷங்கருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சிம்புதேவன், அறிவழகன் உள்ளிட்டவர்கள் ஸ்டேன்ட் வித் டைரக்டர் ஷங்கர் என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்திருந்தனர்.

அந்நியன் கதை ஷங்கருக்கே சொந்தம் என்பது உறுதியானதால் அதன் இந்தி ரீமேக்கிற்கு எந்த தடையுமில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Ranveer singh, Director Shankar