மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வலிமை பட தயாரிப்பாளரும், இயக்குனருமான போனி கபூர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
போனி கபூர் - ஸ்ரீ தேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர். மூத்தவரான ஜான்வி கபூர், பாலிவுட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். அவரது நடிப்பில் வெளியான குஞ்சன் சக்சேனா திரைப்படம் ரசிகர்க மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றறது. மிலி, ஜெரி ஆகிய படங்கள் நிறைவு பெற்று வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.
இளைய மகள் குஷி கபூர் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்ஸை கொண்டுள்ளார். படத்தில் அறிமுகம் ஆகும் முன்னரே அவர், செலிபிரட்டியாக மாறியிருக்கிறார். இந்நிலையில் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போனி கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அஜித் நடித்த நேர் கொண்ட பார்வையை தயாரித்த போனி கபூர், தற்போது வலிமை படத்தை தயாரித்துள்ளார். இந்த 2 படங்களிலும், இயக்குனராக எச்.வினோத்தும், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் பணியாற்றியுள்ளனர்.
Also read... நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்
அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் யுவனுக்கு பதிலாக அனிருத் இசையமைக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொரோனா பிரச்னை காரணமாக இம்மாதம் 13-ம்தேதி வெளியாக வேண்டிய வலிமை திரைப்படம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்போது, வலிமை முதல் படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read :
பொங்கல் வெளியீட்டிலிருந்து கடைசி பெரிய படமும் பின்வாங்கியது...!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.