முகப்பு /செய்தி /entertainment / 'உயிருக்கு போராடும் அண்ணன்' - நடிகை குஷ்பு உருக்கமான பதிவு!

'உயிருக்கு போராடும் அண்ணன்' - நடிகை குஷ்பு உருக்கமான பதிவு!

குஷ்பு

குஷ்பு

குஷ்புவின் சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பாஜகவில் இணைந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் குஷ்பு திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் என இருவேறு பரிணாமங்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தைத் தயாரித்த அவர், தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மின்சார கண்ணா படத்தில் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவரும் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அவரது படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்த நிலையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டரில் கடந்த 4 நாட்களாக இருக்கிறார். இன்று அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குஷ்புவின் சகோதரர் நலம் பெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Khushbu