Khushbu Sundar: இரண்டு மாத இடைவெளியில் இரண்டாவது முறை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

குஷ்பு

குஷ்புவின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டு உள்ளது. அதில் அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு, தன் மனதுக்கு பட்ட விஷயங்களை உள்ளபடியே பகிர்ந்துக் கொள்வார். தனக்கு தவறாக தோன்றுவதை விமர்சிக்கவும் தயங்க மாட்டார். பாஜக-வை கடுமையாக விமர்சித்து வந்த குஷ்பு, திடீரென அக்கட்சியில் இணைந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

    Khushbu Sundar Twitter account hacked, khushbu sundar, khushbu sundar twitter, khushbu sundar twitter hacked, khushbu sundar bjp, குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் ட்விட்டர் முடக்கம், குஷ்பு பாஜக

    இதையடுத்து நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோற்றுப் போனார். இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டு உள்ளது. அதில் அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு அவரின் khushsundar என்ற அவரது ட்விட்டர் பக்கம், briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவிலிருந்து ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    2 மாத இடைவெளியில் 2-வது முறை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: