குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார். அதோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார்.
திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய குஷ்பு, அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி, ட்விட்டரில் களமாடினார். கடைசியில் பாஜக-வில் தஞ்சமடைந்தார்.
அதோடு கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் நடிக்கத் தொடங்கிய குஷ்பு, தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பார்த்திபன்... வித்தியாச முயற்சிகளை செய்ய துடிக்குற கலை ரசிகன் - ரஜினிகாந்த் பாராட்டு!
On #GuruPurnima2022 today I have to thank one person who brought me into politics, taught me about humanity, equality, political grace & always said nothing is greater than self respect. #DrKalaignar he will always be remembered &held in highest esteem in my eyes. நன்றி அப்பா 🙏 pic.twitter.com/szOtv2ckza
— KhushbuSundar (@khushsundar) July 13, 2022
இந்நிலையில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அதில், “இன்று குரு பூர்ணிமா 2022 முன்னிட்டு, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுயமரியாதையை விட வேறெதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kushbu